ஜோ பைடன் அமைத்த மருத்துவக் குழுவில் ஒரு தமிழச்சி

 

ஜோ பைடன் அமைத்த மருத்துவக் குழுவில் ஒரு தமிழச்சி

அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் ஜோ பைடன். அந்த நாட்டில் இப்போதைய பெரிய சிக்கலே கொரோனாவை எப்படி எதிர்கொள்வது என்பதுதான்?

இந்நிலையில் ஜோ பைடன் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் குழுவில் இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட இருவர் இடம்பெற்றிருக்கிறார். அவர்களில் ஒருவர், மருத்துவர் விவேக் மூர்த்தி. ஒபாமா ஆட்சிக்காலத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்த இவரை ட்ரம்ப் அதிபரானதும் நீக்கிவிட்டார். மற்றொருவர் அதுல் கவண்டே.

ஜோ பைடன் அமைத்த மருத்துவக் குழுவில் ஒரு தமிழச்சி

இந்தக் குழு கொரோனா மேலும் பரவலைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ்கள் வழங்கும் பணிகளை மேற்கொள்ளவும் செய்யும் எனக் கூறப்பட்டிருக்கிறது.

ஜோ பைடன் அமைத்த மருத்துவக் குழுவில் ஒரு தமிழச்சியும் இடம்பெற்றிருக்கிறார். அவர் பெயர் செலின் கவுண்டர்.

ஈரோடு, மொடக்குறிச்சியைப் பகுதி பெருமாபாளையம் எனும் கிராமத்தின் திருமலை என்பவரின் மகன் நடராஜன். இவர் ஐஐடி படித்து அமெரிக்காவுக்குச் சென்றார். அவரின் மகள்தான் செலின் கவுண்டர்.

ஜோ பைடன் அமைத்த மருத்துவக் குழுவில் ஒரு தமிழச்சி

செலின் கவுண்டர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசியராகப் பணியாற்றி வௌர்கிறார். மேலும், நோய்த் தடுப்பு தொடர்பாக பல்வேறு நாடுகளுக்கு ஆராய்ச்சிகளுக்காகப் பயணித்தவர்.

இவர் அவ்வப்போது தன் உறவினர்களைச் சந்திக்க, மொடக்குறிச்சிக்கு வருவார். பள்ளி மாணவர்களிடம் தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர். நீலகிரி மலைவாழ் மக்களின் நலன் குறித்தும் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்.

ஈரோட்டின் தமிழச்சி செலின் கவுண்டர் தற்போது ஜோ பைடன் அமைத்த மருத்துவக் குழுவில் இடம்பிடித்திருப்பது தமிழகத்திற்கே பெருமை தரக்கூடியதாகும்.