இந்த 6 பகுதிகளில் சூரியன் மறையவே மறையாது… 2 மாசத்துக்கு இரவே கிடையாது – பிரமிக்க வைக்கும் இயற்கையின் அற்புதம்!

இந்த 6 பகுதிகளில் சூரியன் மறையவே மறையாது… 2 மாசத்துக்கு இரவே கிடையாது – பிரமிக்க வைக்கும் இயற்கையின் அற்புதம்!

இந்தியாவைப் பொறுத்தவரையில் ஏறக்குறைய அனைத்துப் பகுதிகளிலும் 12 மணி நேரம் பகல் 12 மணி நேரம் இரவு என்றே ஒரு நாளைய பொழுது கழியும். அதற்குக் காரணம் சூரியன் உதிப்பதும், அஸ்தமிப்பதுமே. சூரியனை பூமி சுற்றிவருவதால் இந்த மாற்றங்களை நாம் உணர்கிறோம். ஆனால் உலகத்தின் பல பகுதிகளில் சூரியன் மறைவதே இல்லை என்பதை உங்களால் நம்பமுடிகிறதா? அப்போது அங்கு இரவே இருக்காது அல்லவா?

இந்த 6 பகுதிகளில் சூரியன் மறையவே மறையாது… 2 மாசத்துக்கு இரவே கிடையாது – பிரமிக்க வைக்கும் இயற்கையின் அற்புதம்!

இதனை அவர்கள் மிட்நைட் அதாவது நள்ளிரவு சூரியன் என்று அழைக்கிறார்கள். இந்த இயற்கை நிகழ்வு வடக்கு ஆர்க்டிக்கிலும், தெற்கு அண்டார்டிக் பகுதியிலும் கோடைக் காலங்களில் நிகழ்கிறது. குளிர்காலத்தில் இதற்கு எதிராக சூரியன் உதிக்காமல் இருக்குமாம். சூரியன் அடிவானத்திற்கு கீழே இருக்கும்போது அது போலார் இரவு என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வானது நார்வே, ஃபின்லாந்து, ஸ்வீடன், அலஸ்கா, ஐஸ்லாந்து, கனடா ஆகிய பகுதிகளில் நிகழ்கிறது.

இந்த 6 பகுதிகளில் சூரியன் மறையவே மறையாது… 2 மாசத்துக்கு இரவே கிடையாது – பிரமிக்க வைக்கும் இயற்கையின் அற்புதம்!

நார்வே

நார்வே நள்ளிரவு சூரியன் நிலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாட்டில் மே மாதத்தி பிற்பகுதியிலிருந்து ஜூலை பிற்பகுதி வரையிலான சுமார் 76 நாட்கள் தினசரி 20 மணி நேரம் வரை சூரியன் மறைவதே இல்லை. இதனால் எப்போதுமே வெளிச்சம் இருந்துகொண்டே இருக்கும்.

இந்த 6 பகுதிகளில் சூரியன் மறையவே மறையாது… 2 மாசத்துக்கு இரவே கிடையாது – பிரமிக்க வைக்கும் இயற்கையின் அற்புதம்!
நார்வே

ஃபின்லாந்து

இந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கோடைக் காலங்களில் சூரியன் 73 மணி நேரம் பிரகாசிக்கிறது. இதனால் பெரும்பாலும் இரவு நேரங்கள் வருவதில்லை. குளிர் காலத்தில் இதற்கு மாறாக அந்நாட்டு மக்கள் சூரிய ஒளியை உணர்வதே இல்லை.

இந்த 6 பகுதிகளில் சூரியன் மறையவே மறையாது… 2 மாசத்துக்கு இரவே கிடையாது – பிரமிக்க வைக்கும் இயற்கையின் அற்புதம்!
ஃபின்லாந்து

ஸ்வீடன்

ஸ்வீடன் நாட்டில் மே மாத தொடக்கத்திலிருந்து ஆகஸ்ட் பிற்பகுதி வரை, சூரியன் நள்ளிரவில் அஸ்தமித்து மீண்டும் அதிகாலை நான்கு மணிக்கு உதயமாகும். ஸ்வீடனில் சூரிய ஒளியின் காலம் ஒரு வருடத்தில் ஆறு மாதங்கள் வரை மட்டுமே இருக்கும்.

இந்த 6 பகுதிகளில் சூரியன் மறையவே மறையாது… 2 மாசத்துக்கு இரவே கிடையாது – பிரமிக்க வைக்கும் இயற்கையின் அற்புதம்!
ஸ்வீடன்

அலஸ்கா

மே மாதத்தின் பிற்பகுதியிலிருந்து ஜூலை பிற்பகுதி வரை அமெரிக்காவிலிருக்கும் அலாஸ்கா மாகாணத்தில் சூரியன் மறையவே மறையாது. அலாஸ்கா ஆர்க்டிக் வட்டத்திற்கு தெற்கே உள்ளது. அதனால் அங்கு கோடைக் காலங்களில் நள்ளிரவு 12:30 மணிக்கே சூரியன் மறைகிறது.

இந்த 6 பகுதிகளில் சூரியன் மறையவே மறையாது… 2 மாசத்துக்கு இரவே கிடையாது – பிரமிக்க வைக்கும் இயற்கையின் அற்புதம்!
அலஸ்கா

ஐஸ்லாந்து

ஐஸ்லாந்தில் கோடைக்காலங்களில் சூரியன் அஸ்தமனம் ஆகாது. ஏனென்றால் இரவு நேரம் முழுவதுமே சூரியன் வானத்தின் அடியில் கிடைமட்டமாகப் பயணிக்கிறது. இதனால் முழுவதுமாக சூரிய ஒளி மறையாது. மே மாத ஆரம்பத்திலிருந்து ஜூலை வரை ஐஸ்லாந்தில் இரவு என்பதே கிடையாது. நள்ளிரவில் மறையும் சூரியன் அதிகாலை 3 மணிக்கே உதித்துவிடும்.

இந்த 6 பகுதிகளில் சூரியன் மறையவே மறையாது… 2 மாசத்துக்கு இரவே கிடையாது – பிரமிக்க வைக்கும் இயற்கையின் அற்புதம்!
ஐஸ்லாந்து

கனடா

கோடையில் சுமார் 50 நாட்கள் தொடர்ந்து சூரிய ஒளியைக் காணும்
இரண்டாவது பெரிய நாடாக கனடா உள்ளது. ஆனால் கோடைக்காலம் தவிர்த்து ஆண்டு முழுவதும் நாடு பனியால் மூடப்பட்டு காணப்படும்.

இந்த 6 பகுதிகளில் சூரியன் மறையவே மறையாது… 2 மாசத்துக்கு இரவே கிடையாது – பிரமிக்க வைக்கும் இயற்கையின் அற்புதம்!
கனடா