தமிழகம் வரும் மோடியை வரவேற்க தயார்! ஆனா ஒரு கண்டிஷன்- ஆ. ராசா

 

தமிழகம் வரும் மோடியை வரவேற்க தயார்! ஆனா ஒரு கண்டிஷன்- ஆ. ராசா

234 சட்டமன்ற உறுப்பினர்களும் தமிழகத்திற்கு நீட் வேண்டாம் என கோரிக்கை வைக்கின்றனர். இந்த தீர்மானத்தை ஏற்று அடுத்த கல்வியாண்டில் நீட் தேர்வை ரத்து செய்கிறோம் என பிரதமர் மோடி அறிவித்தால் அவரை வரவேற்க தயார் என நீலகிரி தொகுதி எம்பியும், திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

கோவையில் திராவிடன் அறக்கட்டளை சார்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆ.ராசா, “அதிமுக – பாஜக கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்பதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது. மோடி ஆட்சியில் இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து இருக்கின்றது. ஓரே நாடு, ஒரே மொழி என சொல்கின்றனர் ஆனால் இந்துத்துவாவை பற்றி எழுதுபவர்கள் கொல்லப்படுகின்றனர். ஆரிய திராவிட போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நீட் தேர்வை எதிர்க்காமல் டெல்லி காவடி எடுத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த கண்டத்திலேயே பாஜகவை தைரியமாக எதிர்க்கும் ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டுமே. சமூக நீதியை பாதுகாக்கக்கூடிய கட்சி திமுக. மத மேலாண்மையை பாஜக திணிக்கப்பார்க்கிறது.

தமிழகம் வரும் மோடியை வரவேற்க தயார்! ஆனா ஒரு கண்டிஷன்- ஆ. ராசா

அதிமுக அறிவிப்பு எதுவுமே அதன் சொந்த அறிவிப்பு இல்லை. திமுக தந்த புத்தியிலேயே செய்கின்றனர். 7.5 சதவீத இட ஒதுக்கீடு, பயிர்க்கடன் தள்ளுபடி என அனைத்துமே ஸ்டாலினால் தரப்பட்டது. மத்திய பட்ஜெட்டும் தமிழகத்தை வஞ்சிப்பதற்காகவே தயார் செய்யப்பட்டது. ஆனால் அதனை எதிர்க்காமல் ஆளுங்கட்சியினர் ஆதரிப்பது வேதனையாக இருக்கிறது. நாடு முழுவதும் உள்ள தொகுதிகளை பிரதமர் நரேந்திர மோடியின் கட்சி கைப்பற்றினாலும், தமிழகத்தில் அவர்களால் காலூன்ற முடியவில்லை. இது பெரியார், கருணாநிதியின் சாதனை” என பேசினார்.