இமாச்சல பிரதேசத்தில் ஒருநாள் மாவட்ட துணை கலெக்டராக பணியாற்றிய பியூன் மகள்… கனவு நிஜமானதாக மாணவி சந்தோஷம்…

 

இமாச்சல பிரதேசத்தில் ஒருநாள் மாவட்ட துணை கலெக்டராக பணியாற்றிய பியூன் மகள்… கனவு நிஜமானதாக மாணவி சந்தோஷம்…

இமாச்சல பிரதேசம் காங்க்ரா மாவட்டத்தில் துணை கலெக்டராக பணிபுரிபவர் 2016ம் ஆண்டு பேட்ஜ் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஜடின் லால். அவரது அலுவலகத்தில் பியூனாக (உதவியாளர்) வேலை பார்ப்பவர் தனது மகள் ஹினா தாகூர் பத்தாம் வகுப்பில் தேர்வில் 94 சதவீத மதிப்பெண்கள் பெற்று 34வது இடத்தை பெற்றுள்ள தகவலை அண்மையில் மாவட்ட துணை கலெக்டர் லாலிடம் தெரிவித்தார். இதனையடுத்து ஹினாவை கவுரவிக்க அலுவலகத்துக்கு அழைத்து வரும்படி உதவியாளரிடம் தெரிவித்தார். இதனால் உதவியாளர் தனது மகள் ஹினாவை அலுவலகத்துக்கு அழைத்து வந்து துணை கலெக்டர் லாலிடம் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது மாவட்ட துணை கலெக்டர் லாலிடம் தான் ஒருநாள் துணை கலெக்டராக பணியாற்ற விரும்புவதாக ஹினா தெரிவித்தார்.

இமாச்சல பிரதேசத்தில் ஒருநாள் மாவட்ட துணை கலெக்டராக பணியாற்றிய பியூன் மகள்… கனவு நிஜமானதாக மாணவி சந்தோஷம்…

இதனையடுத்து லால் ஹினாவுக்கு ஒரு நாள் துணை கலெக்டராக பணியாற்றும் வாய்ப்பை வழங்க முடிவு செய்தார். அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமையன்று (நேற்று முன்தினம்) துணை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு நாள் துணை கலெக்டராக ஹினா பணியாற்றினார். அலுவலகத்தில் ஹினாவுக்கு அருகில் துணை கலெக்டர் லாலும் அமர்ந்து இருந்தார். துணை கலெக்டர் அலுவலகத்தில் அன்று நடந்த அனைத்து அலுவலக மீட்டிங்களையும் துணை கலெக்டர் லால் வழிகாட்டுதல்களின்படி ஹினா நடத்தினார். மேலும், மாவட்ட துணை கலெக்டர் லாலை சந்தித்து தங்களது புகார்களை தெரிவிக்க வந்தவர்களும் ஹினாவை சந்தித்து தங்களது மனுக்களை கொடுத்தனர்.

இமாச்சல பிரதேசத்தில் ஒருநாள் மாவட்ட துணை கலெக்டராக பணியாற்றிய பியூன் மகள்… கனவு நிஜமானதாக மாணவி சந்தோஷம்…

ஒரு நாள் துணை கலெக்டராக பணியாற்றிய ஹினா இது குறித்து கூறுகையில், இந்த அனுபவம் எனக்கு கனவு நிஜமானது போல் இருந்தது. துணை மாவட்ட கலெக்டர் ஜடின் லால் சார் எனக்கு கனவை காட்டி விட்டார். அதனை நான் நிறைவேற்றுவேன். நான் முதலில் டாக்டராக வேண்டும் என நினைத்தேன் மற்றும் அப்புறம் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக முடிவு எடுத்து விட்டேன் என தெரிவித்தார். காங்க்ரா மாவட்ட துணை கலெக்டர் லால் கூறுகையில், அவளை பாரட்டுவதற்காக அலுவலகத்துக்கு அழைத்தேன். அவர் ஒரு ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக மாற விரும்புவதாக என்னிடம் கூறினார். அதனை தொடர்ந்து ஒரு நாளைக்கு அவரை துணை மாவட்ட கலெக்டராக மாற்ற முடிவு செய்தேன். இன்று (வெள்ளிக்கிழமை) ஹினா மாவட்ட துணை கலெக்டராக எல்லா வேலைகளையும் கவனித்து வருகிறார் என தெரிவித்தார்.