‘ஈஸ்வரன் டீசரை உடனே நிறுத்துங்கள்’ : படக்குழுவுக்கு மத்திய விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்!

‘ஈஸ்வரன் டீசரை உடனே நிறுத்துங்கள்’ : படக்குழுவுக்கு மத்திய விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்!

ஈஸ்வரன் படத்தில் வரும் பாம்புக் காட்சி சர்ச்சையாகியுள்ள நிலையில் படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

‘ஈஸ்வரன் டீசரை உடனே நிறுத்துங்கள்’ : படக்குழுவுக்கு மத்திய விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்!

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ஈஸ்வரன். இப்படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியானது . அதில் சிம்பு தனது கழுத்தில் பாம்பை வைத்திருக்கும் படியாக இருந்தது. அதேபோல் படக்குழு வெளியிட்ட வீடியோவில், மரக் கிளையில் தொங்கும் பாம்பை தனது கையால் பிடித்து சாக்குப்பையில் போடுவது போல காட்சி அமைக்கப்பட்டது. ஆனால் இந்த காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியது. சிம்பு பாம்பை துன்புறுத்தியதாகவும், வன பாதுகாப்பு சட்டத்தை மீறி உள்ளதாகவும் புகார் எழுந்தது. ஆனால் சிம்பு கையில் வைத்திருக்கும் பாம்பு போலியானது என்று இயக்குநர் சுசீந்திரன் விளக்கமளித்தார்.

‘ஈஸ்வரன் டீசரை உடனே நிறுத்துங்கள்’ : படக்குழுவுக்கு மத்திய விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்!

இந்நிலையில் நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தின் பாம்பு காட்சிக்கு(கிராபிக்ஸ் காட்சி ) தடையில்லா சான்றிதழ் வாங்காததால் உரிய விளக்கம் அளிக்குமாறு படக்குழுவிற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உரிய அனுமதி பெறும் வரை படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்களை பகிரப்படும் அதை உடனடியாக நிறுத்துமாறு படக்குழுவிற்கு விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.