ஆன்லைனில் ஆர்டர் கொடுத்தது 300 ரூபாய் லோஷன்… வந்தது ரூ.19 ஆயிரம் ரூபாய் இயர்பட்ஸ்… கஸ்டமருக்கு அடித்தது யோகம்…

ஆன்லைனில் ஆர்டர் கொடுத்தது 300 ரூபாய் லோஷன்… வந்தது ரூ.19 ஆயிரம் ரூபாய் இயர்பட்ஸ்… கஸ்டமருக்கு அடித்தது யோகம்…

டிவிட்டர் பயன்பாட்டாளர் கவுதம் ரீஜ் அண்மையில் பிரபல ஆன்லைன் நிறுவனத்தில் ரூ.300 மதிப்பிலான லோஷனுக்கு ஆர்டர் செய்து இருந்தார். இதனையடுத்து கவுதம் ஆர்டர் கொடுத்த பொருளை நிறுவனம் அவருக்கு டெலிவரி செய்தது. ஆன்லைன் நிறுவனம் வழங்கிய பார்சலை கவுதம் பிரித்து பார்த்தபோது ஆச்சரியத்தில் வாயடைத்து போனார். அந்த பார்சலில் 300 ரூபாய் லோஷனுக்கு பதிலாக ரூ.19 ஆயிரம் மதிப்பிலான வயர்லெஸ் இயர்பட்ஸ் மற்றும் லிக்யூட் டிட்டர்ஜென்டும் இருந்தது.

ஆன்லைனில் ஆர்டர் கொடுத்தது 300 ரூபாய் லோஷன்… வந்தது ரூ.19 ஆயிரம் ரூபாய் இயர்பட்ஸ்… கஸ்டமருக்கு அடித்தது யோகம்…

உடனே கவுதம் சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவையை போனில் தொடர்பு கொண்டு லோஷனுக்கு பதில் அதிக விலையிலான இயர்பட்ஸ் வந்து இருப்பதை தெரிவித்தார். ஆனால் அந்நிறுவனத்தின் சேவை பிரிவு அந்த ஆர்டர் திரும்ப பெற முடியாதது என்பதால் நீங்களே அதனை வைத்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளது. மேலும் லோஷனுக்கான பணத்தையும் கவுதமுக்கு ஆன்லைன் வர்த்தக நிறுவனம் திரும்ப அளித்துள்ளது.

ஆன்லைனில் ஆர்டர் கொடுத்தது 300 ரூபாய் லோஷன்… வந்தது ரூ.19 ஆயிரம் ரூபாய் இயர்பட்ஸ்… கஸ்டமருக்கு அடித்தது யோகம்…

இந்த தகவலை கவுதம் டிவிட்டரில் பதிவு செய்தார். மேலும் ஆன்லைனில் டெலிவரி செய்யப்பட்ட வயர்லெஸ் இயர்பட்ஸ் மற்றும் லிக்யூட் டிட்டர்ஜென்ட் படத்தையும் பதிவேற்றம் செய்து இருந்தார். அடுத்த சில மணி நேரத்தில் அந்த டிவிட் மிகவும் வைரலானது. கவுதமின் டிவிட்டை 5,500 பேர் லைக் செய்தனர், 1,300 ரிடிவிட் செய்தனர். சிலர் நீங்க எந்த ஸ்கின் லோஷனை ஆர்டர் செய்தீங்க சொல்லுங்க எங்களுக்கு லக் எப்படி இருக்குன்னு பார்ப்போம் என கேட்டு இருந்தனர்.