‘பேஸ்புக்கில் பழைய நண்பர் என அறிமுகம்’… ரூ.3 லட்சத்தை பறிகொடுத்துவிட்டு புலம்பும் நபர்!

 

‘பேஸ்புக்கில் பழைய நண்பர் என அறிமுகம்’… ரூ.3 லட்சத்தை பறிகொடுத்துவிட்டு புலம்பும் நபர்!

மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசன். இவரது பேஸ்புக் கணக்கில் பழைய நண்பர் என்று கூறி ஜெயக்குமார் ராமசாமி என்ற பெயரில் ஒரு நபர் பேசிக் கொண்டு வந்துள்ளார். அதனை நம்பிய சீனிவாசன், அந்த நபர் உண்மையிலேயே தன் நண்பன் என நினைத்து பழகி வந்துள்ளார். இந்த நிலையில் சீனிவாசனிடம் அந்த நபர் தனது மைத்துனர் கொரோனாவால் உயிரிழந்து விட்டதாகவும் அடக்கம் செய்ய பணம் வேண்டும் என்று கூறி ரூ.3,500 பணம் கேட்டுள்ளார். அதனால் சீனிவாசன் ஆன்லைன் மூலமாக அந்த பணத்தை அவருக்கு கொடுத்துள்ளார்.

‘பேஸ்புக்கில் பழைய நண்பர் என அறிமுகம்’… ரூ.3 லட்சத்தை பறிகொடுத்துவிட்டு புலம்பும் நபர்!

இப்படியே ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக காரணத்தை சொல்லி பணம் பறித்துக் கொண்டே வந்துள்ளார், பழைய சிநேகிதன் என நம்பி கிட்டத்தட்ட ரூ.3 லட்சம் வரை அவருக்கு கொடுத்த சீனிவாசனுக்கு ஒரு கட்டத்தில் அவர் மீது சந்தேகம் வந்துள்ளது. இதனையடுத்து தனது நண்பர்களிடம் ஜெயக்குமார் பற்றி விசாரித்துள்ளார். அப்போது அவர்கள் அந்த பேஸ்புக் கணக்கு போலியானது என்று கூறியிருக்கின்றனர். அதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாசன், எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் அந்த நபர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், மோசடி செய்தவரை தேடி வருகின்றனர்.