கருப்பு பூஞ்சை நோயால் தொடரும் மரணங்கள்… மக்களே உஷார்!

 

கருப்பு பூஞ்சை நோயால் தொடரும் மரணங்கள்… மக்களே உஷார்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து கருப்பு பூஞ்சை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பல மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோய் அதிக அளவில் பரவி வருகிறது. கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களை இந்த நோய் அதிகமாக தாக்குவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் தினமும் கருப்பு பூஞ்சை நோய்க்கு உயிரிழப்புகள் நேரிடுகிறது.

கருப்பு பூஞ்சை நோயால் தொடரும் மரணங்கள்… மக்களே உஷார்!

இந்த நிலையில், வேலூரை சேர்ந்த முருகானந்தம் என்பவர் கருப்பு பூஞ்சைக்கு உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேண்பாக்கம் பகுதியை சேர்ந்த முருகானந்தம்(44) கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அவருக்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனையில் கருப்பு பூஞ்சை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவரது இடது கண்ணும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

ஐசியூவில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் 40-க்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுள் 13 பேர் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.