கந்துவட்டி கொடுமை: மகளுடன் கூலி தொழிலாளி தற்கொலை

 

கந்துவட்டி கொடுமை: மகளுடன் கூலி தொழிலாளி தற்கொலை

கொரோனா பேரிடர் காலமானது கடந்த 5 மாதங்களாக தமிழகத்தை உலுக்கி வருகிறது. இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடி வருகின்றனர். வறுமையின் பிடியில், பசிக் கொடுமையில் மக்கள் வாடிவரும் நிலையில் கந்துவட்டி கொடுமை என்பது மட்டும் இன்னும் முடிந்தபாடில்லை. வங்கிகளில் வாங்கிய கடன்களை மக்களிடம் கேட்டு தொந்தரவு செய்யக் கூடாது என அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்த நிலையில் வட்டிக்குப் பணம் கொடுப்பவர் மட்டும் சரியாக வட்டி பணத்தை வாங்கிக் கொண்டு செல்லும் கொடுமை தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

கந்துவட்டி கொடுமை: மகளுடன் கூலி தொழிலாளி தற்கொலை

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் பெரியதச்சூர் அருகிலுள்ள நாகந்தூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி அய்யனார். இவர் கந்து வட்டி கொடுமை காரணமாக குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்துள்ளார். மேலும் தனது எட்டு வயது மகள் ஆத்தீஸ்வரிக்கும் விஷம் கொடுத்துள்ளார். இந்நிலையில் இருவரும் உயிரிழந்தனர். இதனையடுத்து அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மருத்துவ கல்லூரி வைக்கப்பட்டுள்ளது. கந்துவட்டி கொடுமை செய்ததாக திண்டிவனம் பகுதியை சேர்ந்த சம்பத் மற்றும் நாகந்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனவும் அய்யனார் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இதனையடுத்து கந்துவட்டிக்காரர்கள் மீது பெரியதச்சூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.