‘ பழங்குடியின குழந்தைகளுக்காக ஆற்றில் நீந்திச் செல்லும் அங்கன்வாடி ஊழியர்’ 10 வருடமாக செய்யும் மகத்தான பணி!

‘ பழங்குடியின குழந்தைகளுக்காக ஆற்றில் நீந்திச் செல்லும் அங்கன்வாடி ஊழியர்’ 10 வருடமாக செய்யும் மகத்தான பணி!

பழங்குடியின குழந்தைகளுக்கு அரசு சத்துணவு பொருட்களை கொடுக்க ஆற்றில் நீந்திச் செல்லும் அங்கன்வாடி ஊழியரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஒடிசாவின் மல்கன்கிரி மாவட்டத்தில் இருக்கும் கோதாவரி ஆற்றின் அருகே இருக்கிறது நெருதுபாலி கிராமம். போக்குவரத்து வசதி என எதுவுமே இல்லாத அந்த கிராமத்தில், சுமார் 400க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். அங்கிருக்கும் குழந்தைகளுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் அரசின் சத்துணவு பொருட்களை கொடுக்க அங்கன்வாடி ஊழியரான ஹேமலதா சிசா வாரந்தோறும் கோதாவரி ஆற்றை கடந்து செல்கிறாராம்.

‘ பழங்குடியின குழந்தைகளுக்காக ஆற்றில் நீந்திச் செல்லும் அங்கன்வாடி ஊழியர்’ 10 வருடமாக செய்யும் மகத்தான பணி!

அந்த ஆற்றில் வெள்ளம் எப்போதுமே பெருக்கெடுத்து ஓடும் சூழலிலும் கிராம மக்களின் நிலையை கருதி, சுமார் 1 கி.மீ தூரம் பழங்குடியின ஆண்களின் உதவியோடு சென்று வருகிறார். சுமார் 10 வருடங்களாக ஹேமலதா இந்த மகத்தான பணியை செய்து வருகிறார். அந்த கிராமத்தில் தற்போது 27 அங்கன்வாடி குழந்தைகளும் 5 கர்ப்பிணி பெண்களும் இருக்கின்றார்களாம். இதனை பற்றி பேசிய ஹேமலதா, 10 வருடமாக இந்த பணியை செய்து வருவதாகவும் வழக்கமாக ஆற்றில் இடுப்பளவு வரை நீர் இருக்கும் நிலையில், மழை பெய்யும் போது தான் சிக்கல் ஏற்படும் என்றும் சில சமயம் வீடு திரும்ப முடியாமல் கிராமத்திலேயே தங்கும் சூழலும் ஏற்படும் என தெரிவித்திருக்கிறார்.

‘ பழங்குடியின குழந்தைகளுக்காக ஆற்றில் நீந்திச் செல்லும் அங்கன்வாடி ஊழியர்’ 10 வருடமாக செய்யும் மகத்தான பணி!

மேலும், கஷ்டங்களுக்கு இடையே தன்னை எதிர்பார்த்து குழந்தைகள் இருக்கிறார்கள் என எண்ணும் போது எல்லா கஷ்டங்களும் மறைந்து விடும் என கூறியிருக்கிறார். பிற குழந்தைகளின் பசியை ஆற்ற தன் உயிரை பணையம் வைக்கும் ஹேமலதாவும் 2 குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது.