மாஸ்க் அணியாமல் வந்து அவமானப்பட்ட அரசு அதிகாரி!!

 

மாஸ்க் அணியாமல் வந்து அவமானப்பட்ட  அரசு அதிகாரி!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த படி உள்ளது .கடந்த சில மாதங்களாக 300க்கும் கீழ் கொரோனா தொற்று இருந்து வந்த நிலையில் இனிவரும் காலம் காலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து தாண்டும் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . பொதுமக்கள் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றினால் மட்டுமே கொரோனாவிலிருந்து நாம் விடுபட முடியும் என்றும் சுகாதாரத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவது தொடர்கதையாகி உள்ளது. ஏற்கனவே 13 பள்ளிகளை சேர்ந்த 187 மாணவர்களுக்கும் நான்கு கல்லூரிகளை சேர்ந்த 38 மாணவருக்கும் ஏற்பட்டிருந்த நிலையில் அங்கு தொற்று பாதிப்பு எண்ணிக்கை 229 ஆக உயர்ந்துள்ளது.

மாஸ்க் அணியாமல் வந்து அவமானப்பட்ட  அரசு அதிகாரி!!

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் நேற்று தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்கள் /அதிகாரிகள் தபால் வாக்குகளை செலுத்த வந்து இருந்தனர் . அப்போது அங்கு வந்த சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் சங்கரன் அனைவரும் மாஸ்கை தவறாமல் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளி விடுங்கள் என்றும் அறிவுறுத்தினார். அப்படி மாஸ்க் அணியாமல் வந்தால் அவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் என்ற போர்டையும் அவர் தனது கழுத்தில் மாட்டிக் கொண்டிருந்தார்.

மாஸ்க் அணியாமல் வந்து அவமானப்பட்ட  அரசு அதிகாரி!!

அப்போது அரசு அதிகாரி ஒருவர் அங்கு முகக் கவசம் அணியாமல் தபால் வாக்கு செலுத்த முன் வந்திருந்தார். இதைக்கண்ட சங்கரன் அவரை பிடித்து இழுத்து 200 ரூபாய் அபராதம் செலுத்துங்கள் என்று கேட்டார் . அத்துடன் தான் வைத்திருந்த மாஸ்க்கை அவருக்கு அளித்து, கும்பகோணத்தில் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. தயவுசெய்து மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள். அது உங்களுக்கும் சரி மற்றவர்களுக்கும் சரி பாதுகாப்பு கொடுக்கும். அதே போல் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நடந்து கொள்ளுங்கள் என்று காட்டமாக தெரிவித்தார்.