மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் வந்தது.. இந்தியா வசம் உள்ள ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்தது

மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் வந்தது.. இந்தியா வசம் உள்ள ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்தது

பிரான்சிலிருந்து நேற்று மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தது. இதனையடுத்து இந்தியா வசம் உள்ள ரபேல் போர் விமானங்களின் மொத்த எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.

2016ம் ஆண்டில் மத்திய அரசு இந்திய விமானபடையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் மொத்தம் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் போட்டது. இதுவரை டசால்ட் நிறுவனம் 6 தொகுப்புகளாக இந்தியாவுக்கு மொத்தம் 21 ரபேல் போர் விமானங்களை வழங்கி இருந்தது. இந்த சூழ்நிலையில் நேற்று மாலை மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு வந்தடைந்தன.

மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் வந்தது.. இந்தியா வசம் உள்ள ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்தது
ரபேல் போர் விமானங்கள்

இது தொடர்பாக இந்திய விமான படை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரான்சிஸன் இஸ்ட்ரஸ் விமான தளத்திலிருந்து நேரடியாக இடைநில்லாமல் சற்று நேரத்துக்கு (நேற்று மாலை) முன் வந்தடைந்தன. ரபேல் விமானங்களின் 7 ஆயிரம் கி.மீட்டர் இடைவிடாத பயணத்தின்போது, விமானங்களில் எரிபொருள் நிரப்புவதற்கு (நடு வானில்) ஐக்கிய அரபு எமிரேட் விமானப்படை ஆதரவு அளித்ததை ஐ.ஏ.எப். பாரட்டுகிறது என்று தெரிவித்து இருந்தது.

மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் வந்தது.. இந்தியா வசம் உள்ள ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்தது
ரபேல் போர் விமானம்

நேற்று வந்த புதிய தொகுப்பு (3 ரபேல் போர் விமானங்கள்) வந்ததை தொடர்ந்து, தற்போது இந்திய விமான படையிடம் உள்ள ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. முதல் ரபேல் படைப்பிரிவு அம்பாலா விமானப் படை நிலையத்தில் அமைந்துள்ளது. இந்த படைப்பிரிவில் சுமார் 18 விமானங்கள் உள்ளன. ரபேல் போர் விமானங்களின் இரண்டாவது படை பிரிவு மேற்கு வங்கத்தின் ஹசிமாரா விமான தளத்தை மையமாக கொண்டுள்ளது. நேற்று வந்த 3 ரபேல் போர் விமானங்களும் இந்த படைப்பிரிவில் சேர்க்கப்படும் என தகவல். இந்த ஆண்டு இறுதிக்குள் எஞ்சிய 12 ரபேல் விமானங்களையும் பிரான்ஸ் நிறுவனம் இந்தியாவுக்கு வழங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.