வங்கியில் இருந்து எடுத்து வந்த ஒரு லட்சத்தை தவறவிட்ட விவசாயி! அதன்பின் நடந்த சுவாரஸ்யம்…

 

வங்கியில் இருந்து எடுத்து வந்த ஒரு லட்சத்தை தவறவிட்ட விவசாயி! அதன்பின் நடந்த சுவாரஸ்யம்…

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வடக்குவலையப்பட்டியைச் சேர்ந்த விவசாயியான அழகன் என்பவரது இடத்தினை, சாலை விரிவாக்கப் பணிக்காக அரசு கையகப்படுத்தியதையடுத்து அவருக்கு பணம் வங்கியில் செலுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அழகன் வங்கியில் இருந்து தனது சொந்த தேவைக்காக ரூபாய் ஒரு இலட்சத்தை எடுத்துக் கொண்டு அதனுடன் தனது இரண்டு வங்கி கணக்கு புத்தகம், ஆதார், வருமானவரித்துறை கார்டு மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை மஞ்சள் பையில் வைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பி கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக தவறவிட்டுள்ளார், இதையடுத்து தனது குடும்பத்தாருக்கு பணம் தவறவிட்ட தகவலை தெரிவித்து விட்டு அவர்கள் உதவியுடன் வந்த சாலைகளில் சென்று பணத்தை தேடியுள்ளார்.

வங்கியில் இருந்து எடுத்து வந்த ஒரு லட்சத்தை தவறவிட்ட விவசாயி! அதன்பின் நடந்த சுவாரஸ்யம்…

இந்நிலையில் செம்மினிப்பட்டியைச் சேர்ந்த மதிமுக ஒன்றியச் செயலாளர் இராமநாதன் மற்றும் அவருடைய நண்பர் ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டரான வீரணன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருக்கும்போது, அழகனின் மஞ்சள் பை சாலையோரம் இருப்பதை பார்த்துள்ளனர். அதில் ஒரு லட்சம் ரூபாய் மற்றும் சில ஆவணங்கள் இருந்துள்ளன. இதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரும், தெரிந்தவர்கள் மூலம் பணத்தை தவறவிட்ட அழகனை தொடர்பு கொண்டு மேலூர் வட்டாசியர் அலுவலகத்திற்கு அவரை வருமாறு கூறினர். இதையடுத்து வட்டாசியர் சுந்தரப்பாண்டியனிடம் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் முன்னிலையில் பணம் மற்றும் தவறவிட்ட பொருட்கள் அழகனிடம் ஒப்படைக்கப்பட்டது. பணத்தை பெற்றுக்கொண்ட விவசாயி அழகன் கண்ணீருடன் இருவருக்கும் நன்றி சொன்னார்.