‘ரத்த வெள்ளத்தில் துடித்த நபர்’ ரோட்டிலேயே முதலுதவி அளித்து உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்!

 

‘ரத்த வெள்ளத்தில் துடித்த நபர்’ ரோட்டிலேயே முதலுதவி அளித்து உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்!

வேலூர் அருகே சாலை விபத்தில் படுகாயம் அடைந்து துடித்துக் கொண்டிருந்த நபர்களுக்கு மருத்துவர் ஒருவர் சற்றும் யோசிக்காமல் முதலுதவி அளித்ததால், ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

சென்னை முகப்பேரு பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் மற்றும் பார்த்திபன் ஆகியோர் லோடு ஆட்டோவில் சரக்கு ஏற்றிக் கொண்டு கிருஷ்ணகிரிக்கு சென்றுள்ளனர். அங்கு சரக்குகளை டெலிவரி செய்த பின்னர், வேலூர் மாவட்டம் மோட்டூர் அருகே இவர்கள் சென்று கொண்டிருந்த போது வாகனம் நிலை தடுமாறி லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

‘ரத்த வெள்ளத்தில் துடித்த நபர்’ ரோட்டிலேயே முதலுதவி அளித்து உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்!

இந்த கோர விபத்தில் பாலசுந்தரமும், பார்த்திபனும் படுகாயம் அடைந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக காரில் சென்ற மருத்துவர், உடனே அவர்களுக்கு ரத்தம் அதிகம் வெளியேறாதவாறு முதலுதவி அளித்தார். இதனையடுத்து அவர்கள் 2 பேரும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இருப்பினும், பாலசுந்தரம் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். மேலும், பார்த்திபன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சற்றும் தயங்காமல் மருத்துவர் அளித்த உதவி, அப்பகுதி மக்களிடையே வெகுவாக பாராட்டப்பட்டது. முதலுதவி அளித்ததால் தான் பார்த்திபன் உயிர் பிழைத்ததாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.