கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த கில்லாடி பூனை கைது… போலீசார் அதிரடி நடவடிக்கை!

கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த கில்லாடி பூனை கைது… போலீசார் அதிரடி நடவடிக்கை!

பனாமா நாட்டில் காலான் மாகாணத்தில் நியூஷா எஸ்பெரன்சா என்ற சிறை இருக்கிறது. இந்தச் சிறையில் 23 அறைகளில் 1800க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறைக்குள் கஞ்சா, கொக்கைன் போன்ற போதைப் பொருட்களின் உபயோகம் இருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது. சிறைக்குள்ளும் யாரும் ஊடுருவிருக்கிறார்களா என்று சிறை வார்டன்களும் அதிகாரிகளும் சோதனை செய்திருக்கிறார்கள்.

கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த கில்லாடி பூனை கைது… போலீசார் அதிரடி நடவடிக்கை!

ஆனால் அப்படியான நடமாட்டமும் சிறைக்குள் இருப்பதாக அவர்களுக்குத் தெரியவில்லை. யாருமே உள்ளே வராமல் எப்படி கைதிகளுக்கு போதைப் பொருட்கள் கிடைக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் விழி பிதுங்கி போயுள்ளனர். அப்போது தான் ஒரு துப்பு கிடைத்திருக்கிறது. அடிக்கடி ஒரு வெள்ளை நிற பூனை சிறையின் மதில் மீது வருவதும் போவதுமாகப் போக்குவரத்தில் இருந்திருக்கிறது. இதனைக் கவனித்த வார்டன்கள் உடனடியாக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த கில்லாடி பூனை கைது… போலீசார் அதிரடி நடவடிக்கை!

அப்படியாக சிறைக்குள் பூனை வந்தபோது அதைக் கையும் களவுமாகப் பிடித்து சோதனையிட்டுள்ளனர். அப்போது பூனையின் கழுத்தில் ஒரு துணிப்பை தொங்குவதைப் பார்த்துள்ளனர். அதைப் பிரித்துப் பார்க்கையில் உள்ளே கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போயுள்ளனர்.

கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த கில்லாடி பூனை கைது… போலீசார் அதிரடி நடவடிக்கை!

இதையடுத்து அந்தப் பூனையை கைது செய்த அதிகாரிகள், விலங்குகள் நலத்துறையிடம் ஒப்படைத்தனர். தற்போது அதனை ஒரு சின்ன கூண்டுக்குள் அடைத்து வைத்துள்ளனர். அந்தப் பூனையின் புகைப்படத்தையும் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியிருக்கிறார்கள் பனாமா காவல் துறையினர்.