‘வாக்குக்கு பணம்’ : வீடியோவில் சிக்கிய அதிமுக நத்தம் விஸ்வநாதன்

‘வாக்குக்கு பணம்’ : வீடியோவில் சிக்கிய அதிமுக நத்தம் விஸ்வநாதன்

ஆரத்தி தட்டில் பணம் போட்டதாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் நத்தம் விஸ்வநாதன் போட்டியிடுகிறார். இவர் நேற்று ஆவிச்சிபட்டியில் உள்ள மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

‘வாக்குக்கு பணம்’ : வீடியோவில் சிக்கிய அதிமுக நத்தம் விஸ்வநாதன்

அப்போது பேசிய அவர், “நத்தம் தொகுதியில் பல திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளேன். அடிப்படை தேவைகளான குடிநீர், தெருவிளக்குகளை அமைத்து கொடுத்துள்ளேன். அதேபோல் நத்தம் பேருந்து நிலையம் தான் தமிழகத்தில் சிறப்பு மிக்க பேருந்து நிலையமாக உள்ளது. 234 தொகுதிகளில் நத்தம் தொகுதி சிறப்பாக உள்ளது” என்றார்.

‘வாக்குக்கு பணம்’ : வீடியோவில் சிக்கிய அதிமுக நத்தம் விஸ்வநாதன்

இந்நிலையில் நத்தம் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆரத்தி தட்டில் பணம் போட்ட புகாரில் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் மீது குற்றப்பிரிவு 171E கீழ் நத்தம் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் பிரிவு வீடியோ கண்காணிப்பு குழு தலைவர் மைக்கேல் ஆரோக்கியராஜ் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.