காதலியை கர்ப்பிணியாக்கிவிட்டு மற்றொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முயன்ற பலே இளைஞர்!

மதுரையில் காதலிப்பதாக ஏமாற்றிவிட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்த மணமகனை திருமண மண்டபத்திலேயே போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கரட்டுபட்டி கிராமத்தை சேர்ந்தவர் வைரம் (16) என்ற 10ம் வகுப்பு பள்ளி மாணவிக்கும் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த உதயகுமார் (21) என்ற இளைஞருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக வைரத்திடம் ஆசை வார்த்தை கூறிய உதயகுமார் அந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கர்ப்பம் தரித்த மாணவி உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு உதயகுமாரிடம் வலியுறுத்தி வந்த நிலையில் மாணவியை திருமணம் செய்ய மறுத்ததோடு, இந்த விஷயத்தில் வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டலும் விடுத்துள்ளார் உதயகுமார்.

இதனிடையே இன்று உதயகுமாருக்கும் வேறொரு பெண்ணிற்கும் திருமணம் நடைபெறவிருந்ததை அறிந்த மாணவி வைரம் இது குறித்து மதுரை சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதனையடுத்து உடனடியாக நிலக்கோட்டை சென்ற மகளிர் போலீசார் திருமண மண்டபத்திலேயே மணமகன் உதயகுமாரை மடக்கி விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Most Popular

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா உறுதி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 86 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அதில் அதிகமாக தமிழகமும், மகாராஷ்டிராவுமே அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. தமிழகத்தில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து...

வாழ்த்து சொல்வதற்காகவா டெல்லி சென்றார் கு.க.செல்வம்?

தலைமை மீதிருந்த அதிருப்தியினால் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் டெல்லி்யில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்ததாக தகவல் வெளியான நிலையில், தான் பாஜகவில் இணையவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார் செல்வம். பின்னர் எதற்காக...

சென்னையில் ஒரு லட்சத்து 4,027 பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 5,063 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர்...

30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறுவை நெல் சாகுபடியில் சாதனை படைத்த தமிழக அரசு!

தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டிருப்பது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் சாதனையாக கருதப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த...