எம்.பி.பி.எஸ். படிக்கும் 64 வயது மாணவர்… 40 ஆண்டுக்கு பிறகு கனவுக்கு உயிர் கொடுத்த ஓய்வு பெற்ற வங்கி பணியாளர்

 

எம்.பி.பி.எஸ். படிக்கும் 64 வயது மாணவர்… 40 ஆண்டுக்கு பிறகு கனவுக்கு உயிர் கொடுத்த ஓய்வு பெற்ற வங்கி பணியாளர்

ஒடிசாவில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர் மருத்துவம படிக்க வேண்டும் என்ற இளம்வயது கனவை 40 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேற்றியுள்ளார். அவர் 64 வயதில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்து அனைவரும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

ஒடிசா மாநிலம் பார்கர் மாவட்டத்தின் அடாபிராவை சேர்ந்தவர் 64 வயதான ஜெய் கிஷோர் பிரதான். ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான கிஷோர் பிரதான் தனது இளவயது நிறைவேறாத கனவான மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவை தற்போது நிறைவேற்றியுள்ளார். 64 வயதில் நீட் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று அரசு மருத்துவ கல்லூரியான வீர் சுரேந்திர சாய் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ரிசர்ச்யில் சேர்ந்துள்ளார்.கல்வி கற்பதற்கு ஆர்வம்தான் வேண்டும் வயது ஒரு பிரச்சினை இல்லை என்பதை நிரூபணம் செய்துள்ள ஜெய் கிஷோர் மருத்துவ படிப்பில் சேர்ந்தது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

எம்.பி.பி.எஸ். படிக்கும் 64 வயது மாணவர்… 40 ஆண்டுக்கு பிறகு கனவுக்கு உயிர் கொடுத்த ஓய்வு பெற்ற வங்கி பணியாளர்
நீட் தேர்வு

நான் இடைநிலை தேர்வுக்கு பிறகு நான் எம்.பி.பி.எஸ். படிக்க விரும்பினேன். ஆனால் அப்போது முடியவில்லை. இதனையடுத்து இளங்கலை அறிவியில் எடுத்து படித்தேன். அதன் பிறகு நான் வேலைக்கு செல்ல தொடங்கினேன். இருப்பினும் இடையில் வேலையை விட்டு விட்டு எம்.பி.பி.எஸ். நுழைவு தேர்வு எழுத முயற்சி செய்தேன். ஆனால் நாங்கள் 5 சகோதரர்கள் என்பதால் அந்த நேரத்தில் குடும்ப பொறுப்புகள் என்னை வேலையை விட அனுமதிக்கவில்லை. எனக்கு இரட்டை பெண் குழந்தைகள் மற்றும் ஒரு பையன். எனது மனைவி மருந்தாளுனர்.

எம்.பி.பி.எஸ். படிக்கும் 64 வயது மாணவர்… 40 ஆண்டுக்கு பிறகு கனவுக்கு உயிர் கொடுத்த ஓய்வு பெற்ற வங்கி பணியாளர்
ஜெய் கிஷோர் பிரதான்

வங்கி பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு மருத்துவ படிப்புக்காக மீண்டும் எனது முயற்சியை தொடங்கினேன். 2016ம் ஆண்டில் எனது மகளுக்கு நீட் தேர்வுக்கு சொல்லி கொடுத்து வந்தேன். அப்போது நீட் தேர்வுக்கு சொல்லி கொடுக்கும் நாம் ஏன் அந்த தேர்வை எழுதக்கூடாது என்று எண்ணம் ஏற்பட்டது. நீட் தேர்வு எழுத என்னை எனது மனைவியும் ஊக்கப்படுத்தினாள். இதனையடுத்து நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தேன். படித்து முடித்த பிறகு எனக்கு வேலை கிடைக்காது என்று தெரியும் என்றாலும் ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை வழங்கி உதவ முயற்சி செய்வேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். கிஷோர் பிரதானின் மகள்களில் ஒருவர் இளங்கலை பல்அறுவை சிகிச்சை (பி.டி.எஸ்.) மாணவராக இருக்கிறார். மற்றொரு மகளும் பி.டி.எஸ். மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.