ரஜினிக்கு எதிராக கொடிபிடிக்கும் சீமான் ஆதரவாளர்கள்! #தமிழர்_நாட்டை_தமிழர்_ஆள்வோம்

 

ரஜினிக்கு எதிராக கொடிபிடிக்கும் சீமான் ஆதரவாளர்கள்! #தமிழர்_நாட்டை_தமிழர்_ஆள்வோம்

ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக பேச்சு எழுந்த போதிலிருந்தே தமிழகத்தை தமிழர்தான் ஆள வேண்டுமென்று சொல்லி, ரஜினியின் அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

ரஜினி கட்சி வேண்டுமானால் தொடங்கட்டும் ஆனால், ஆட்சிக்கு வர விடமாட்டோம். மண்ணின் மைந்தர்கள்தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று சொல்லிக்கொண்டே வந்தவர், கட்சி ஆரம்பித்தால் நான் கட்சியின் தலைவர் மட்டும்தான். முதல்வர் வேட்பாளர் நான் இருக்க மாட்டேன் என்று சொன்னதும், சரியான முடிவை எடுத்திருக்கிறார் ரஜினி என்று ரஜினிகாந்தின் முடிவை வரவேற்றார் சீமான்.

ரஜினிக்கு எதிராக கொடிபிடிக்கும் சீமான் ஆதரவாளர்கள்! #தமிழர்_நாட்டை_தமிழர்_ஆள்வோம்

இதன்பின்னர் ரஜினியின் உடல்நிலை பற்றிய பேச்சு வந்தபோது, ரஜினி அரசியலுக்கு வருவது அவரது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று தெரிவித்தார்
இந்நிலையில் இன்று ரஜினிகாந்த், கட்சி தொடங்க இருப்பதாக அறிவிள்ளார். இதை முன்னிட்டு, மாத்துவோம்எல்லாத்தையும்மாத்துவோம்
இப்போஇல்லேன்னாஎப்பவும்_இல்ல என்ற ஹேஷ்டேக்கினை ரஜினி ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

இப்ப இல்லேன்னா எப்பவும் இல்ல.. என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழர்நாட்டைதமிழர்_ஆள்வோம் என்ற ஹேஷ்டேக்கினை நாம் தமிழர் கட்சியினர் டிரெண்டாக்கி வருகின்றனர்.