சுதந்திர தினத்தில் இந்தியாவுக்கு அடித்த லக்… ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஹெட்மாஸ்டரான இந்தியா!

சுதந்திர தினத்தில் இந்தியாவுக்கு அடித்த லக்… ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஹெட்மாஸ்டரான இந்தியா!

ஐக்கிய நாடுகள் (ஐநா) சபையின் சக்திவாய்ந்த அமைப்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் பார்க்கப்படுகிறது. உலக நாடுகளில் பயங்காரவாத மற்றும் அசாதாரண சூழல்களைத் தடுத்து அமைதியை நிலைநாட்டுவதே இந்த அமைப்பின் தலையாயக் கடமை. இதில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளன. இதுதவிர பத்து நாடுகள் தற்காலிகமான உறுப்பினராகவும் உள்ளன.

சுதந்திர தினத்தில் இந்தியாவுக்கு அடித்த லக்… ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஹெட்மாஸ்டரான இந்தியா!

இந்தத் தற்காலிக உறுப்பினர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகள். ஒவ்வொரு ஆண்டும் பிராந்தியங்களின் அடிப்படையில் ஐந்து இடங்களுக்கான தேர்தல் நடைபெறும். பிராந்தியங்களில் இருக்கும் நாடுகள், தேர்தலில் நிற்கும் நாட்டிற்கு தங்களது வாக்குகளைச் செலுத்தும். அந்த வகையில் இந்தாண்டு ஜூனில் நடைபெற்ற தேர்தலில் ஆசிய-பசிபிக் பிராந்திய உறுப்பினர் இடத்திற்கு இந்தியா போட்டியிட்டது. பிராந்தியத்திலுள்ள பெரும்பாலான நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவளித்ததால், இந்தியா எட்டாவது முறையாகத் தற்காலிக உறுப்பினராகியது.

சுதந்திர தினத்தில் இந்தியாவுக்கு அடித்த லக்… ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஹெட்மாஸ்டரான இந்தியா!

அதன்படி 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக இந்தியா இருக்கும். அதேபோல இந்த கவுன்சிலில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதமும் கவுன்சிலுக்கு தலைமை தாங்கும். அந்த வரிசையில் இந்த மாதம் பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் அதே மாதத்தில் பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை தாங்குவது இந்தியாவுக்கு மரியாதைக்குரிய நிகழ்வு என ஐநாவுக்கான இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி பெருமிதம் தெரிவித்துள்ளார்.