ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான 9ஆம் வகுப்பு மாணவன் சஜன் தற்கொலை! தொடரும் சோகம்

 

ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான 9ஆம் வகுப்பு மாணவன் சஜன் தற்கொலை! தொடரும் சோகம்

ஆன்லைன் விளையாட்டு மோகத்திற்கு ஆளாகி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் தங்களது வாழ்க்கையை தொலைத்து விடுவதோடு மட்டும் அல்லாமல் உடன் இருப்பவர்களையும் வேதனைக்கு உள்ளாக்கிவிடுகிறார்கள்.

இத்தகையை விளையாட்டுகளினால் பணத்தை இழப்பதோடு உயிரையும் இழக்க நேரிடுகிறது என்று தெரிந்திருந்தும், மீண்டும் மீண்டும் இதே மோக வலையில் வீழத்துடிப்பதுதான் அதிர்சியளிக்கிறது.

பெற்றோருக்கு தெரியாமல் ஆன்லைன் விளையாட்டில் 90 ஆயிரம் இழந்த ராமநாதபுரம் 7ஆம் வகுப்பு மாணவனின் சம்பவம் கடந்த வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கன்னியாகுமரி மாணவன் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால், பெற்றோர் திட்டியதில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட செய்தி பேரதிர்சியாக அளிக்கிறது.

ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான 9ஆம் வகுப்பு மாணவன் சஜன் தற்கொலை! தொடரும் சோகம்

கன்னியாகுமரி மணவாளக்குறிச்சி அடுத்த கருமன்குடல் பகுதியைச்சேர்ந்த ராஜ்குமார், சவூதி அரேபியாவில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். ராஜ்குமாரின் மனைவி கீதா. மகன் சஜன், அரசுப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான 9ஆம் வகுப்பு மாணவன் சஜன் தற்கொலை! தொடரும் சோகம்

துபாயில் இருக்கும் ராஜ்குமார் மனைவி, மகனுடன் வீடியோ காலில் பேசுவதற்காக ஆண்ட்ராய்டு போன் வாங்கிக்கொடுத்திருக்கிறார்.

கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் விடுமுறை என்பதால், அம்மாவின் செல்போனை எடுத்து ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கியுள்ளான் சஜன். பப்ஜி விளையாட்டில் ஆர்வம் கொண்ட சஜன், அந்த விளையாட்டிற்கு அடிமையாகி இருக்கிறான். விளையாட்டு மூலமாகவே பணமும் சம்பாதிக்கலாம் என்று தெரியவந்ததால், இந்த சின்ன வயசுலேயே ஆன்லைனில் ரம்மி விளையாடத் தொடங்கிவிட்டான்.

விளையாட பணம் தேவைப்படும்போதெல்லாம் அம்மாவுக்கு தெரியாமல், அம்மா கீதாவின் வங்கிக்கணக்கில் இருந்த பணத்தை எல்லாம் எடுத்தும், மேலும் பணம் தேவைப்பட்டபோது, தவித்துள்ளான். அம்மாவிடம் இதைச்சொன்னபோது, வங்கிக்கணக்கில் இருந்த பணம் எல்லாம் இப்படி நாசமா போய்விட்டதே என்று திட்டியுள்ளார். இதில், இன்னும் கொஞ்சம் பணம் கொடுத்தால் விளையாட்டில் விட்டதை மீட்டுவிடுவேன் என்று சஜன் சொன்னதை கேட்டு ஆத்திரத்தில் கண்டபடி திட்டியுள்ளார் கீதா.

ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான 9ஆம் வகுப்பு மாணவன் சஜன் தற்கொலை! தொடரும் சோகம்

பணம் இல்லாமல் விளையாட்டைத்தொடர முடியாமல் போனதால் மன அழுத்தத்தில் இருந்துள்ளான் சஜன். இரவில் வீட்டை வெளியே சென்ற சஜன் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், தேட ஆரம்பித்துள்ளார் கீதா.

வாழை தோட்டத்தில் மயங்கிய நிலையில் கிடந்த சஜனை மீட்டு, திங்கள் சந்தை மருத்துவமனைக்கு கொண்டு போயிருக்கிறார். சஜனை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் வரும் வழியிலேயே உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

எந்த நேரமும் செல்போனில் மூழ்கி இருந்ததை கவனிக்காமல் விட்டதும் என் தவறுதான். பணத்தை இழந்ததால் ஆத்திரப்பட்டு திட்டாமல் பக்குவாய் திருத்தாமல் விட்டதும் என் தவறுதான் என்று மகனை இழந்த கீதா கண்ணீர் வடிக்கிறார்.