15ம் தேதி 9i ஸ்மார்ட்போன்-அறிமுகப்படுத்துது ரெட்மீ

 

15ம் தேதி 9i ஸ்மார்ட்போன்-அறிமுகப்படுத்துது ரெட்மீ

நீங்க ரெட் மீ பிரியரா ? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான். வரும் 15ம் தேதி 9ஐ என்ற புதிய ஸ்மார்ட்போனை ரெட்மி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.


இந்த புதிய போன் அறிமுகம் குறித்து அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ள சியோமி நிறுவனம், அதன் தோற்றம் குறித்த படத்தையும் வெளியிட்டுள்ளது. அதன்படி பெரிய திரை கொண்ட போனாக இருக்கும் என்றும் 3.5 எம்எம் ஜாக் ஆகியவை இருக்கும் என தெரிகிறது. மேலும் அதில் 4ஜிபி ரேம், தனியாக மெமரி கார்டு இணைத்துக்கொள்ளும் வசதி மற்றும் பெரிய பேட்டரியுடன் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இந்த போனின் சிறப்பம்சங்கள் குறித்து சியோமி தகவல் தெரிவிக்கவில்லை.
இந்த புதிய போன் பிளிப்கார்ட் மற்றும் எம்ஐ ஸ்டோரில் வரும் 15ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

15ம் தேதி 9i ஸ்மார்ட்போன்-அறிமுகப்படுத்துது ரெட்மீ

எஸ்.முத்துக்குமார்