ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம்; 98% சுத்தமானது என்று ஆட்சியர் சான்று

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம்; 98% சுத்தமானது என்று ஆட்சியர் சான்று

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது. முதற்கட்டமாக 4. 82 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் நெல்லை அரசு மருத்துவமனக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம்; 98% சுத்தமானது என்று ஆட்சியர் சான்று

கொரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தால் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருவதால், ஸ்டெர்லை ஆலை தாமாகவே முன்வந்து, ஆக்சிஜன் தயாரிப்பதாக உச்சநீதிமன்றத்தில் அனுமதி கேட்டது. ஆனால் தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையினை திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கே ஆக்சிஜன் மட்டுமே தயாரிக்கப்படும் என்ற உறுதியோடு அனுமதி அளித்தது உச்சநீதிமன்றம்.

இதையைடுத்து ஆக்சிஜன் தயாரிப்பதற்கான வேலைகள் நடந்து வந்தன. நேற்று இரவு முதல் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது 4.82 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம்; 98% சுத்தமானது என்று ஆட்சியர் சான்று

டேங்கர் லாரிகளில் சென்ற ஆக்சிஜனை கொடி அசைத்து தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் அனுப்பி வைத்தார். இந்த திரவ ஆக்சிஜன் 98 சதவிகிதம் சுத்தமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இனிவரும் நாட்களில் தினமும் 35 டன் திரவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் ஸ்டெர்லைட் ஆலை என்று கூறப்படுகிறது.