96 பட பாதிப்பு -கல்யாணத்துக்கு பிறகும் தொடர்ந்த  கல்லூரி காதல் – கணவரை சிக்கவைக்க காதலியை கொலை செய்து தற்கொலை நாடகம் 

 

96 பட பாதிப்பு -கல்யாணத்துக்கு பிறகும் தொடர்ந்த  கல்லூரி காதல் – கணவரை சிக்கவைக்க காதலியை கொலை செய்து தற்கொலை நாடகம் 

மஹாராஷ்டிராவில் தனது முன்னாள் காதலியைக் கொன்று  , அவரது கணவரால் அவள்  தற்கொலை செய்துகொண்டது போல பொய் தோற்றத்தை உருவாக்கிய  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலீசார் இங்கு தெரிவித்தன

மஹாராஷ்டிராவில் தனது முன்னாள் காதலியைக் கொன்று  , அவரது கணவரால் அவள்  தற்கொலை செய்துகொண்டது போல பொய் தோற்றத்தை உருவாக்கிய  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலீசார் இங்கு தெரிவித்தனர்

arrest

வியாழக்கிழமை,மகாராஷ்டிராவின் ஜல்னா நகரில் உள்ள எம்ஹாடா காலனியில் வசிக்கும் சச்சின் கெய்க்வாட் என்பவர் , அவரது முன்னாள் காதலி தீபாலி ரமேஷ் ஷிண்டேஜ்ஜை  டிசம்பர் 21 ஆம் தேதி ரயில் பாதையின் அருகே  கொலை செய்ததால்  போலீசார் புதன்கிழமை கைது செய்ததாக இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர்  தெரிவித்தார்.

police

கொலை செய்யபப்ட்ட  20 வயதுடைய பெண்னின்  உடல், ரயில் பாதையின் அருகே தற்கொலைக் குறிப்புடன் , அவரது செல்போன் மற்றும் இரு சக்கர வாகனம் ஆகியவற்றுடன் கண்டெடுக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
தற்கொலைக் குறிப்பிலும், தனது தந்தைக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளிலும், கொலை செய்யப்பட்ட பெண்  தனது கணவர் அவினாஷ் வஞ்சாரே மீது குற்றம் சாட்டியதாகவும், தன்னைத் துன்புறுத்தியதாகவும், அவர் மீது தீவிர நடவடிக்கை எடுக்கும்படி கட்டாயப்படுத்தியதாகவும் அவர் கூறினார். 

rape

கொலை செய்யப்பட்டவர் ஆறு மாதங்களுக்கு முன்பு வஞ்சரேவை இரகசியமாக திருமணம் செய்து கொண்டார். கொலை செய்யப்பட்டவரின் தந்தை பதிவு செய்த புகாரின் பேரில் வஞ்சரேபேஸை போலீசார் கைது செய்தனர். இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கையில்  தலையில்  பலத்த காயம் ஏற்பட்டதால் அந்த பெண் இறந்துவிட்டார் என்று தெரியவந்துள்ளது .

விசாரணையின் போது, , திருமணமான கெய்க்வாட்,  இறந்தவருடன் கள்ள உறவு வைத்திருப்பதாகவும், அவர் இறந்ததிலிருந்து தலைமறைவாக இருந்ததாகவும் போலிசார் கண்டறிந்தனர்

realation

.அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஸ்கேன் செய்தபோது, கெய்க்வாட், இறந்த பெண்ணை  அவர் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

விசாரணையின் போது, கெய்க்வாட்  டிசம்பர் 21 ஆம் தேதி, கொலையானவரை இனிவாடிக்கு அழைத்துச் சென்றதாக ஒப்புக் கொண்டார், அங்கு கடுமையான வாக்குவாதத்திற்குப் பிறகு அவர் அவளைக் கொன்று , பின்னர் ரெயில்வே பாதையின் அருகே சடலத்தை போட்டுவிட்டு , தற்கொலை போல ஒரு  தோற்றத்தை உருவாக்கினார்  என்றார்.

murder

கெய்க்வாட் ,அப்பெண் தற்கொலை செய்து கொண்டது போல  கொலைசெய்யப்பட்டவரின் தந்தைக்கு அவரது செல்போனில் இருந்து செய்தி அனுப்பியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்..