கொரோனா நோயாளிகளுக்கு தன்னம்பிக்கை தரும் 95 வயது முதியவர்!

 

கொரோனா நோயாளிகளுக்கு தன்னம்பிக்கை தரும் 95 வயது முதியவர்!

கொரோனா தொற்று பாதித்த பலரும் மன உறுதி இல்லாமல் அதிக அச்சத்திற்கு சென்றுவிடுகிறார்கள். அந்த அச்சமே அவர்களின் நோய் தீவிரத்திற்கு காரணமாகிவிடுகிறது. இந்நிலையில், கொரோனா பாதித்த 95 வயது முதியவர், மருத்துவ சிகிச்சையை விடவும் மன உறுதியால் கொரோனாவில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். பலருக்கும் ஒரு நம்பிக்கையை கொடுத்திருக்கிறார்.

கொரோனா நோயாளிகளுக்கு தன்னம்பிக்கை தரும் 95 வயது முதியவர்!

கொரோனா இரண்டாவது நிலை தமிழகத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் சிறுவர்களையும் இப்போது அதிகம் பாதித்து வருகிறது. இதனால் கொரோனாவை கண்டு எல்லோரும் அச்சத்தில் இருக்கும் நிலையிலிருந்து மீண்டு விடலாம் என்ற நம்பிக்கை தந்த அந்த முதியவர், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரைச் சேர்ந்தவர்.

முதியவர் பழனிச்சாமி(95) ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர் தற்சமயம் வயது மூத்தவராக இருந்தாலும் விவசாய பணிகளை கவனித்து வருகிறார். இந்த வயதான காலத்திலும் யாருடைய உதவியை எதிர்பார்க்காமல் தனது வேலைகளை தானே பார்த்து கொள்கிறார்.

கொரோனா நோயாளிகளுக்கு தன்னம்பிக்கை தரும் 95 வயது முதியவர்!

அண்மையில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து செல்வபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில் அவருக்கு பரிசோதனை இருப்பது உறுதியானது. இதையடுத்து தனிப் பிரிவில் அவரை அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இளம் வயதினரே, குறிப்பாக சிறுவர்களும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், முதியவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் உயிர் பிழைப்பது அரிது என்று எல்லோரும் கருதி வரும் நிலையில், சிகிச்சைக்கு பின்னர் பூரண குணமடைந்து திரும்பியிருக்கிறார் பழனிச்சாமி.

மருத்துவ சிகிச்சையை விடவும் மன உறுதியால் கொரோனாவில் இருந்து மீண்டு வந்ததாக சொல்லும் அவர், கொரோனா நோயாளிகளுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.