’24 மணி நேரத்தில் 95 பேர் மட்டுமே மரணம்’: குறையும் கொரோனா உயிரிழப்புகள்!

 

’24 மணி நேரத்தில் 95 பேர் மட்டுமே மரணம்’: குறையும் கொரோனா உயிரிழப்புகள்!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கணிசமாக குறைந்திருக்கிறது. கடந்த மாதம் 16ம் தேதி முதல் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கியிருப்பதால் விரைவில் கொரோனா இல்லாத நிலையை அடைய முடியும் என்ற நம்பிக்கை எழுந்திருக்கிறது. குறுகிய காலகட்டத்திலேயே ஒன்றுக்கு இரண்டு தடுப்பூசிகளை கண்டுபிடித்த இந்தியா பல நாடுகளுக்கு முன்னோடியாக திகழ்ந்து வரும் சூழலில், கொரோனா வைரஸை முற்றிலுமாக ஒழிக்கும் பணிகள் முடுக்கி விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

’24 மணி நேரத்தில் 95 பேர் மட்டுமே மரணம்’: குறையும் கொரோனா உயிரிழப்புகள்!

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 11,713 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒரே நாளில் 95 பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாகவும்
14,488 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் 54,16,849 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாகவும் 1,48,590 பேருக்கு கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரு நாளில் ஏற்படும் உயிரிழப்புகள் இதுவரையில் 3 இலக்கங்களில் இருந்து வந்த நிலையில், இன்று உயிரிழப்புகள் 2 இலக்கங்களில் பதிவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.