94 லட்சம் பேர் குணமடைந்தனர் – இந்தியாவில் கொரோனா

 

94 லட்சம் பேர் குணமடைந்தனர் – இந்தியாவில் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 7 கோடியே 31 லட்சத்து 90 ஆயிரத்து 663 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 5 கோடியே 13 லட்சத்து 24 ஆயிரத்து 906 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 16 லட்சத்து 27 ஆயிரத்து 904 பேர். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 2,02,37,853 பேர்.

94 லட்சம் பேர் குணமடைந்தனர் – இந்தியாவில் கொரோனா

கொரோனாவால் அதிகம் பாதித்துள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றாலும், கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 161 நாட்களுக்கு பிறகு 22,100-க்கும் கீழ் குறைவாக 22,065-ஆக பதிவாகியுள்ளது. கடந்த ஜூலை 7-ஆம் தேதி 22,252 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டது.

94 லட்சம் பேர் குணமடைந்தனர் – இந்தியாவில் கொரோனா

நோய் தொற்றிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து, உயிரிழப்புகள் குறைந்து வருவதால் நாட்டில் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகின்றது.

நாட்டில் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3.4 லட்சத்திற்கும் கீழாக 3,39,820 ஆக பதிவாகியுள்ளது. இது மொத்த பாதிப்பில் வெறும் 3.43 சதவீதமாகும்.

94 லட்சம் பேர் குணமடைந்தனர் – இந்தியாவில் கொரோனா

குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 94 லட்சத்தைக் கடந்துள்ளது (94,22,636). தற்போது சிகிச்சை பெற்று வருவோர் மற்றும் குணமடைந்தோர் ஆகியோருக்கான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து 90,82,816 ஆக உள்ளது. நாட்டில் குணமடைந்தவர்களின் வீதம் 95.12 ஆக உயர்ந்துள்ளது. இது உலகளவில் அதிகமான ஒன்று. கடந்த 24 மணி நேரத்தில் 34,477 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதே காலகட்டத்தில் 354 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்திய மாநிலங்களில் தினசரி கொரோனா அப்டேட் பட்டியலில் புதிய நோயாளிகள் அதிகரிப்பில் தமிழ்நாடு ஏழாம் இடத்திலும், மரண எண்ணிக்கையில் தமிழ்நாடு 8-ம் இடத்திலும் உள்ளது. நோயாளிகள் குணமடைவதில் முதல் பத்து இடத்தில் இல்லை.