ஓட்டம் பிடித்த மக்களுக்கு மத்தியில்… தில்லாக டெஸ்ட் எடுத்துக் கொண்ட 93 வயது முதியவர்!

ஓட்டம் பிடித்த மக்களுக்கு மத்தியில்… தில்லாக டெஸ்ட் எடுத்துக் கொண்ட 93 வயது முதியவர்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், 100ல் 20% மக்களுக்கு பாதிப்பு உறுதியாவதாக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கொரோனா டெஸ்ட் எடுக்கப்படும் 100 நபர்களுள் 20 பேருக்கு பாதிப்பு உறுதியாகிறது. இந்த தகவல் வெகுவாக பரவியதையடுத்து மக்கள் டெஸ்ட் எடுத்துக் கொள்வதற்கே பயப்படுகிறார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் தஞ்சாவூரிலும் நடந்துள்ளது.

ஓட்டம் பிடித்த மக்களுக்கு மத்தியில்… தில்லாக டெஸ்ட் எடுத்துக் கொண்ட 93 வயது முதியவர்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம் அமைத்தும் நடமாடும் முகாம்கள் மூலமும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தினமும் 5 ஆயிரம் பேர் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். நடமாடும் முகாம்கள் மூலமாக பரிசோதிக்கப்படும் பலருக்கு பாதிப்பு உறுதியாவதாக அம்மாவட்ட சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அம்மாவட்ட நிர்வாகம் கொரனோ பரிசோதனையை அதிகரித்துள்ளது.

ஓட்டம் பிடித்த மக்களுக்கு மத்தியில்… தில்லாக டெஸ்ட் எடுத்துக் கொண்ட 93 வயது முதியவர்!

நடமாடும் கொரோனா பரிசோதனை வேனை பார்த்தவுடனே மக்கள் பயத்தில் ஓட்டம் பிடித்துள்ளனர். இங்கும் அங்குமாக ஓடி ஒளிந்துக் கொண்டுள்ளனர். இருப்பினும், அப்பகுதியில் வசிக்கும் மிட்டாய் தாத்தா என்று அழைக்கப்படும் 93 வயது முதியவர் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொண்டுள்ளார். பரிசோதனை செய்துகொள்ள ஓடி ஒளிந்து கொண்ட மக்களுக்கு மத்தியில் இந்த முதியவர் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொண்டதற்கு சுகாதாரத் துறையினர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.