“பென்ஷன் பணத்தை தர மறுத்த பாட்டி ,டென்ஷனான தாத்தா” -92 வயசுல பண்ற வேலையா இது ?

 

“பென்ஷன் பணத்தை தர மறுத்த பாட்டி ,டென்ஷனான தாத்தா” -92 வயசுல பண்ற வேலையா இது ?

பென்ஷன் பணத்தை தர மறுத்த பாட்டியை ஒரு 92 வயது தாத்தா வாக்கிங் ஸ்டிக்கால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .



ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள யலவர்ரு கிராமத்தில் சாமுவேல் என்ற 92 வயது ஒய்வு பெற்ற ஊழியரும் அவரது 90 வயது மனைவி அப்ரயம்மாவும் சுமார் பத்து ஆண்டுகளாக தனித்தனியாக தங்கியுள்ளனர். இருப்பினும், அந்த மனைவிக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் மாநில அரசு வழங்குகிறது அவரின் கணவர் சாமுவேல் அந்த பென்ஷன் பணத்தில் பாதியை ஒவ்வொரு மாதமும் சென்று வாங்கி வந்து விடுவார் .
அதன் படி கடந்த திங்கள் கிழமையன்று சாமுவேல் பென்ஷன் பணத்தை வாங்க அந்த 90 வயது அப்ராயம்மா வீட்டிற்கு சென்ற போது இருவருக்கும் சண்டை வந்துள்ளது .அப்போது கோபத்தில் அந்த சாமுவேல் தன்னுடைய மனைவியை தன்னுடைய வாக்கிங் ஸ்டிக்கால் அடித்து கொலை செய்துவிட்டார் .அதனால் அங்கேயே அந்த பாட்டி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார் .
உடனே அநத தாத்தா சாமுவேல் தன்னுடைய மகன்கள்,மற்றும் பேரன்களுக்கு போன் செய்து தன்னுடைய மனைவியை கொலை செய்து விட்டதாக கூறினார் .அதை அவர்கள் நம்பாமல் போனை வைத்து விட்டார்கள் .பிறகு மீண்டும் அவர் போன் செய்து சொன்ன போது அவர்கள் ஓடி வந்து பார்த்தார்கள் .அப்போது, அந்த பாட்டி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார்கள் .பிறகு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து விசாரணை நடத்தி அந்த பாட்டியை கொலை செய்த அந்த 92 வயதான சாமுவேலை கைது செய்து சிறையிலடைத்தார்கள் .

“பென்ஷன் பணத்தை தர மறுத்த பாட்டி ,டென்ஷனான தாத்தா” -92 வயசுல பண்ற வேலையா இது ?