திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, திருமலை திருப்பதி கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் வழக்கமான பூஜைகள் நடந்து வந்தன. கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பிறகு திருப்பதியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

திருப்பதி கோயில் மீண்டும் திறக்கப்பட்டு நேற்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் 50 போலீசார் உள்பட 100 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. நாளுக்கு நாள் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையிலும், திருப்பதியை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாவட்ட நிர்வாகம் அறிவிக்காதது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி நகரிலும், கோவில் ஊழியர்கள் மத்தியிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அரசு உரிய நடவடிக்கை, எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.