புதுச்சேரி கிரிக்கெட் அணியில் 90% இடங்களை தமிழருக்கே ஒதுக்கீடு செய்! ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி கிரிக்கெட் அணியில் 90% இடங்களை  தமிழருக்கே ஒதுக்கீடு செய்!  ஆர்ப்பாட்டம்!

இந்திக்காரர்களும், வடமாநிலத்தவர்களும் மட்டுமே புதுச்சேரி கிரிக்கெட் அணியில் தொடர்ந்து விளையாடி வரும் நிலையில், புதுச்சேரி அணியில் 90 சதவிகித இடங்கள் புதுச்சேரி, காரைக்கால் தமிழர்களுக்கே ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி கிரிக்கெட் அணியில் 90% இடங்களை  தமிழருக்கே ஒதுக்கீடு செய்!  ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி ராசா திரையரங்கம் அருகில் காலை 10.30 மணியளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், புதுச்சேரியில் கிரிக்கெட் விளையாடும் தமிழர்களும், பல்வேறு அரசியல் கட்சி, இயக்கத் தோழர்களும் திரளாகப் பங்கேற்றனர்.

ஒதுக்கிடு.. ஒதுக்கிடு… புதுச்சேரி கிரிக்கெட் அணியில் 90 சதவிகித இடங்களை தமிழர்களுக்கே ஒதுக்கிடு…, இந்திக்காரர்களை அணியில் திணிக்கும் சி.ஏ.பி. கிரிக்கெட் சங்கத்தை புதுச்சேரி அரசே தடை செய்.., தனி கிரிக்கெட் சங்கம் அமைத்து, புதுச்சேரி தமிழர்களுக்கே இடம் வழங்க நடவடிக்கை எடு.. என்பன போன்ற என்பன கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

புதுச்சேரி கிரிக்கெட் அணியில் 90% இடங்களை  தமிழருக்கே ஒதுக்கீடு செய்!  ஆர்ப்பாட்டம்!

தமிழ்த்தேசியப் பேரியக்க புதுச்சேரி செயலாளர் இரா. வேல்சாமி போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். பாரதிதாசன் புதுச்சேரி கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் சங்கச் செயலாளர் சந்திரன் முன்னிலை வகித்தார். த.தே.பே. தோழர்களும் சிறுவர்களும் போராட்டத்தில் கொளுத்தும் வெயிலையும் பாராது பங்கேற்றனர்.