திருப்பதியில் அதிகரிக்கும் கொரோனா… அரசு அறிவிப்பால் குழப்பம்!

 

திருப்பதியில் அதிகரிக்கும் கொரோனா… அரசு அறிவிப்பால் குழப்பம்!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றுபவர்களில் 90க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியான நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக திருப்பதி அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு மணி நேரத்தில் இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டதால் மக்கள் மத்தியில் குழப்பம் உள்ளது.

திருப்பதியில் அதிகரிக்கும் கொரோனா… அரசு அறிவிப்பால் குழப்பம்!கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, திருமலை திருப்பதி கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் வழக்கமான பூஜைகள் நடந்து வந்தன. கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பிறகு திருப்பதியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

திருப்பதியில் அதிகரிக்கும் கொரோனா… அரசு அறிவிப்பால் குழப்பம்!திருப்பதி மாநகராட்சி பகுதியில் மொத்தம் உள்ள 50 வார்டுகளில் 43 வார்டுகள் கொரோனா தொற்று உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 800க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதில் 500 பேர் கடந்த ஒரு வாரத்தில் கண்டறியப்பட்டவர்கள். தற்போது திருப்பதி கோவிலில் பணியாற்றும் ஊழியர்கள் 80 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகி உள்ளதாக சித்தூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருப்பதியில் அதிகரிக்கும் கொரோனா… அரசு அறிவிப்பால் குழப்பம்!நாளுக்கு நாள் கொரோனா வேகமாக பரவி வருவதைத் தொடர்ந்து திருப்பதியை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதனால் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு சில மணி நேரத்தில் இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. கொரோனா திருப்பதி நகரிலும், கோவில் ஊழியர்கள் மத்தியிலும் வேகமாக பரவி வரும் நிலையில் அரசு எடுத்த நடவடிக்கை, கட்டுப்படுத்த எடுக்க உள்ள நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.