இந்தியாவில் 90% பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்!

 

இந்தியாவில் 90% பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 90% பேர் குணமடைந்து விட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இரண்டாம் கட்ட அலையில் இருப்பதால், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே போல, இந்தியாவில் பண்டிகைக் காலக்கட்டத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருக்க வாய்ப்பு இருப்பதால் மக்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கையுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 90% பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்!

அதில், கடந்த 24 மணி நேரத்தில் 50,129 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 78,64,811 ஆக அதிகரித்துள்ளதாகவும் ஒரே நாளில் 578 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,18,534 ஆக அதிகரித்துள்ளதாகவும் கொரோனாவில் இருந்து 70,78,123 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் தற்போது 6,68,154 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 90% ஆக இருப்பதாகவும் உயிரிழப்பு விகிதம் 1.51% ஆக இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.