உயிர் காக்கும் மருந்தின் மூலக்கூறு 90 சதவிகிதம் சீனாவில் இருந்து இறக்குமதி! – சீன புறக்கணிப்பு உதவுமா?

 

உயிர் காக்கும் மருந்தின் மூலக்கூறு 90 சதவிகிதம் சீனாவில் இருந்து இறக்குமதி! – சீன புறக்கணிப்பு உதவுமா?

சீனாவில் இருந்து எல்லாவற்றையும் இறக்குமதி செய்துவிட்டு, இந்தியாவை அசெம்பல் செய்யும் இடமாக மாற்றிவிட்டு சீனாவைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறினால் அது பலன் அளிக்குமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உயிர் காக்கும் மருந்தின் மூலக்கூறு 90 சதவிகிதம் சீனாவில் இருந்து இறக்குமதி! – சீன புறக்கணிப்பு உதவுமா?இந்தியாவில் ஒரு தொழிலை நேர்மையுடன் செய்ய ஆயிரம் கட்டுப்பாடுகள். ஆனால், சீனாவில் இருந்து இறக்குமதி செய்தால் வரி மட்டுமே, இந்தியாவில் உற்பத்தி செய்வதை விட விலைக் குறைவு என்பதால் இன்றைக்கு பலரும் சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து வருகின்றனர். அது உயிர்காக்கும் மருந்து உற்பத்தி வரையிலும் தொடர்கிறது.

உயிர் காக்கும் மருந்தின் மூலக்கூறு 90 சதவிகிதம் சீனாவில் இருந்து இறக்குமதி! – சீன புறக்கணிப்பு உதவுமா?இந்தியாவில் மருந்துப் பொருட்களின் மூலக்கூறு உற்பத்தி என்பது மிக மிகக் குறைவு. 90 சதவிகித மருந்து வேதி மூலக்கூறுகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, மாத்திரை மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. சாதாரண காய்ச்சலுக்கான பாராசிட்டமால் மாத்திரை தயாரிக்க மூலக்கூறு சீனாவில் இருந்துதான் வந்தாக வேண்டும் என்ற நிலை உள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள், அலுமினியம், மின்னணு பொருட்கள் என அனைத்தும் அங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இங்கு அசம்பல் மட்டுமே செய்யப்படுகின்றன.

உயிர் காக்கும் மருந்தின் மூலக்கூறு 90 சதவிகிதம் சீனாவில் இருந்து இறக்குமதி! – சீன புறக்கணிப்பு உதவுமா?அப்படி இருக்கும் இந்தியாவில் தொழில்களை மேம்படுத்தாமல் சீனா புறக்கணிப்பு என்ற முடிவு எடுக்க வேண்டும் என்று கூறுவது நமக்கு நாமே சூனியம் வைத்துக்கொள்வது போன்றது என்று எச்சரிக்கின்றனர். இந்த தகவல் உண்மையா பொய்யா என்று கூட ஆராயாமல் சீனாவின் கைக்கூலிகள் என்று விமர்சனம் வைப்பதை மட்டுமே தேசபக்தி என்று சிலர் செய்து கொண்டிருக்கின்றனர்.

http://

http://


சீன புறக்கணிப்பு பற்றி பலரும் கருத்து கூறி வரும் நிலையில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் வெளியிட்டுள்ள பதிவில், “சீனாவில் தயாராகும் எல்லா பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று சில “அறிவுஜிவிகள்” சொல்லிக்கொண்டிருப்பதாக தெரிகிறது. ஒருவேளை அப்படி இந்திய அரசு முடிவெடுத்தால், பல கோடி இந்திய மக்கள் கொரோனா உள்ளிட்ட பல நோய்களால் அதிக இன்னலுக்கு ஆளாவார்கள். இந்தியாவில் உற்பத்தியாகக்கூடிய “உயிர்காக்கும் மருந்துகளுக்கான வேதியல் மூலக்கூறுகள் (API’s)” 90% சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. அவை இல்லை எனில் மருந்துகள் கிடையாது. இந்திய மக்கள் நோயிலிருந்து குணமாகாமல் செத்து மடியவேண்டியதுதான். இதை புரிந்து கொள்ளாமல் குதிப்பது எந்த வித்த்திலும் நன்மை பயக்காது” என்று கூறியுள்ளார்.