90 லட்சம் பேர் பாதிப்பு – அமெரிக்காவில் கொரோனா நிலவரம்

 

90 லட்சம் பேர் பாதிப்பு – அமெரிக்காவில் கொரோனா நிலவரம்

கொரோனா பரவத் தொடங்கிய நாள் முதலே அதிகப் பாதிப்புகளைச் சந்தித்து வரும் நாடு அமெரிக்கா. உலகத்தின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவால் கொரோனா பரவலைத் தடுக்க முடியவில்லை. அந்நாட்டு அதிபருக்கும் கொரோனா தாக்கப்பட்டது என்பதுதான் பெரிய சோகம்.

அமெரிக்காவின் மொத்த பாதிப்பு 90 லட்சத்தைக் கடந்துவிட்டது. இன்று மதியம் வரையிலான அப்டேட் அடிப்படையில் அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 90,39,170. இவர்களில் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 58,78,859 பேர். மரணம் அடைந்தவர்கள் 2,32,101 பேர். இறப்பு விகிதம் 4 சதவிகிதம்.

90 லட்சம் பேர் பாதிப்பு – அமெரிக்காவில் கொரோனா நிலவரம்

அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில்தான் அதிக பாதிப்பு. அங்கு மட்டுமே 9,27,518 பேர் பாதிக்கப்பட்டனர். நாட்டின் மொத்த பாதிப்பில் 10 சதவிகிதம். அதற்கு அடுத்து, கலிஃபோர்னியாவில் 9,16,737, ஃப்ளோரிடாவில் 7,86,311, நியூ யார்க்கில் 5,35,120 பேரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

90 லட்சம் பேர் பாதிப்பு – அமெரிக்காவில் கொரோனா நிலவரம்

செப்டம்பர் முதல் வாரம் தொடங்கி அம்மாதம் வரை புதிய நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வந்த அமெரிக்காவில் இம்மாதம் 10-ம் தேதி முதல் மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. அக்டோபர் 23-ம் தேதி மட்டும் 81,422 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுவே ஒரே நாளில் அதிகளவு புதிய நோயாளிகளின் எண்ணிக்கை இருந்த நாள். ஆனாலும், இந்தளவுக்கு மரணமடைபவர்களின் எண்ணிக்கை உயர வில்லை என்பது ஆறுதல் அளிப்பதாகும்.