90 நாளில் 5 கோடி செல்போன்கள் விற்பனை! இந்தியாவுக்கு படையெடுக்கும் சர்வதேச செல்போன் நிறுவனங்கள்

 

90 நாளில் 5 கோடி செல்போன்கள் விற்பனை! இந்தியாவுக்கு படையெடுக்கும் சர்வதேச செல்போன் நிறுவனங்கள்

கடந்த செப்டம்பர் காலாண்டில் மட்டும் நம் நாட்டில் 4.90 கோடி செல்போன்கள் விற்பனையாகி உள்ளதாக ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகத்தையே உள்ளங்கைக்குள் கொண்டு வந்து விடுகிறது செல்போன்.இன்றைய இளம் தலைமுறையினர் கையில் பணம் இல்லை என்றாலும் கவலைபடமாட்டார்கள் ஆனால் செல்போன் இல்லையென்றால் ஏதோ ஒன்றை இழந்தபோல் காணப்படுவார்கள். அந்த அளவுக்கு செல்போன் அனைவரது வாழ்க்கையில் நம்மை அறியாமலேயே பின்னி பிணைந்து விட்டது. நாளுக்கு நாள் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

அன்றாட வாழ்வில் செல்போன்

செல்போன் விற்பனை ஆண்டுதோறும் சிறப்பான வளர்ச்சி கண்டு வருகிறது. கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 2019 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்தியாவில் மொத்தம் 4.90 கோடி செல்போன்கள் விற்பனையாகி உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது செல்போன் விற்பனை 10 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

ஜியோமி

கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்தியாவில் விற்பனையான செல்போன்களில் 26 சதவீதம் ஜியோமி நிறுவனத்துடையது. அதற்கு அடுத்து சாம்சங் நிறுவன செல்போன்கள் 20 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. விவோ (17 சதவீதம்), ரியல்மி (16 சதவீதம்), ஒப்போ(8 சதவீதம்) ஆகிய நிறுவனங்களும் கணிசமான சந்தை பங்களிப்பை கொண்டுள்ளன. ஆப்பிள் நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 செல்போன் பிராண்ட் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.