90 களில் ஊரை முடக்கிய ராமாயணம் தொடர் -ஊர் முடங்கிய நேரத்தில் மறுஒளிபரப்பு..

 

90 களில் ஊரை முடக்கிய ராமாயணம் தொடர் -ஊர் முடங்கிய நேரத்தில் மறுஒளிபரப்பு..

ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நிகழ்ச்சியான ராமாயணம் தொடரை இனி ஒரு நாளைக்கு இரண்டு முறை டிவியில் காண முடியும். மார்ச் 28 சனிக்கிழமை முதல் இந்த நிகழ்ச்சி மீண்டும் தொலைக்காட்சியில் வரும் என்று மத்திய  அமைச்சர் பிரகாஷ் ஜவ்தேகர் அறிவித்தார்.

ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நிகழ்ச்சியான ராமாயணம் தொடரை இனி ஒரு நாளைக்கு இரண்டு முறை டிவியில் காண முடியும். மார்ச் 28 சனிக்கிழமை முதல் இந்த நிகழ்ச்சி மீண்டும் தொலைக்காட்சியில் வரும் என்று மத்திய  அமைச்சர் பிரகாஷ் ஜவ்தேகர் அறிவித்தார்.  “பொது மக்களின் வேண்டுகோளின்  பேரில், ராமாயணம் தொடரின்  ஒளிபரப்பை மார்ச் 28, சனிக்கிழமை காலை 9 மணி முதல் காலை 10 மணி வரையிலும், அதன் மறு ஒளிபரப்பை  மாலை 9 மணி முதல் 10 மணி வரையிலும் ஒளிபரப்ப இருக்கிறோம் “என்றார். 

ramayan

ராமாயணத்தில் சீதாவாக நடித்த  நடிகை தீபிகா சிக்லியா டிவியில்  நாடகம் மீண்டும் வருவதால்  உற்சாகமாக இருக்கிறார். ராமாயணம் மீண்டும் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாவதால்  அவர்  சனிக்கிழமை தனது ரசிகர்களுக்காக ஒரு  செய்தியை  பகிர்ந்து கொண்டார். அந்த செய்தியில் , தீபிகா  சிக்லியா  தனது ரசிகர்களை மீண்டும் தொலைக்காட்சியில் ராமாயணம்  நிகழ்ச்சியை ரசித்து  அதிலிருந்து நிறைய கற்றுக்கொள்ளுங்கள் என்றார். மேலும் அவர்  ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூறி  கையெழுத்திட்டார்.நிகழ்ச்சியின் முதல் எபிசோட் இன்று காலை 9 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட போது    மில்லியன் கணக்கான ரசிகர்களைப் போலவே தீபிகாவும் அதை மீண்டும் பார்த்தார்.