விலங்குகளையும் விட்டு வைக்காத கொரோனா… 9 சிங்கங்கள் பாதிப்பு!

 

விலங்குகளையும் விட்டு வைக்காத கொரோனா… 9 சிங்கங்கள் பாதிப்பு!

நாடு முழுவதும் கொரனோ வைரஸ் இரண்டாம் நிலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கான மக்களை பாதிப்படையச் செய்த இந்த கொரோனா வைரஸ் விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. கொரோனா பாதிப்பின் ஆரம்பக் கட்டத்தில் விலங்குகளிடம் இருந்தே மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுவதாக கூறப்பட்டது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த நிபுணர்கள், மனிதர்களிடம் இருந்தே விலங்குகளுக்கு வைரஸ் பரவுவதாக தெரிவித்தனர்.

விலங்குகளையும் விட்டு வைக்காத கொரோனா… 9 சிங்கங்கள் பாதிப்பு!

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ஐதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவற்றின் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன் முடிவில் 4 ஆண் சிங்கங்கள் மற்றும் 4 பெண் சிங்கங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட சிங்கங்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த சிங்கங்கள் அனைத்தும் குணமடைந்ததாக நேரு விலங்கியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்தது.

விலங்குகளையும் விட்டு வைக்காத கொரோனா… 9 சிங்கங்கள் பாதிப்பு!

இந்த நிலையில், சென்னை அருகே வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. விலங்குகளுக்கு பசியின்மை, சளி உள்ளிட்ட தொந்தரவு இருந்ததால் அதன் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இன்று அதன் முடிவுகள் வெளியான நிலையில் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.