9.5 கோடி பரிசோதனைகள் – இந்தியாவில் கொரோனா

 

9.5 கோடி பரிசோதனைகள் – இந்தியாவில் கொரோனா

உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா. அனைத்து நாடுகளையும் சேர்த்து பார்க்கையில், பாதிக்கப்பட்டிப்போர். 4 கோடியே 2 லட்சத்து 87 ஆயிரத்து 371 பேர். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 11 லட்சத்து 18 ஆயிரத்து 396 பேர்.கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 1 லட்சத்து 21 ஆயிரத்து 710 நபர்கள்.

9.5 கோடி பரிசோதனைகள் – இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் தொடர்ந்து நான்காவது நாளாக தேசிய தொற்று உறுதிப்படுத்துதல் விகிதம் 8 சதவீதத்துக்கும் கீழே உள்ளது. நாடு முழுவதும் விரிவான முறையில் பரிசோதனைகளை நடத்துவதன் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. இதுவரை செய்யப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 9.5 கோடியை இன்று கடந்தது.

அக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்தில் தினசரி சராசரி தொற்று உறுதிப்படுத்துதல் விகிதம் 6.13 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் தற்போதைய பாதிப்புகள் எண்ணிக்கை 7,72,055 ஆகும். இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ள மொத்த பாதிப்புகளுடன் ஒப்பிடும் போது தற்போதைய பாதிப்புகளின் விகிதம் வெறும் 10.24 சதவீதம் ஆகும்.

9.5 கோடி பரிசோதனைகள் – இந்தியாவில் கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 66,399 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 66 லட்சத்துக்கும் (66,63,608)அதிகமானோர் இதுவரை குணமடைந்துள்ளனர். கொரோனாவின் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதும், கொரோனா நோய்த் தொற்ற்லிருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் இந்தியாவில் ஆறுதல் அளிக்கும் முக்கியச் செய்தி.