9.34 லட்சம் பேர் – இந்தியாவில் கொரோனா சிகிச்சையில் இருப்போர்

9.34 லட்சம் பேர் – இந்தியாவில் கொரோனா சிகிச்சையில் இருப்போர்

கொரோனா உலகையே அச்சுறுத்தும் பேரிடராக மாறிவிட்டது. கொரோனா தடுப்பூசியைத் தவிர நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த வழியில்லை எனும் நிலையை நோக்கி சூழல் சென்றுக்கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 53 லட்சத்து 99 ஆயிரத்து 250 பேர்.

9.34 லட்சம் பேர் – இந்தியாவில் கொரோனா சிகிச்சையில் இருப்போர்

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 66 லட்சத்து 23 ஆயிரத்து 510 நபர்கள். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 41 ஆயிரத்து 824 பேர்.

இந்தியாவில் ஒரே நாளில் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், குணமடைபவர்களின் தேசிய சராசரி தொடர்ந்து அதிகரித்து தற்போது 84.34%-ஆக உள்ளது. புதிதாக குணமடைந்தவர்களில் 75% பேர், 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

9.34 லட்சம் பேர் – இந்தியாவில் கொரோனா சிகிச்சையில் இருப்போர்

நாட்டில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 9,34,427-ஆக உள்ளது. இன்றுவரை, சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, நாட்டின் மொத்த பாதிப்பில் 14.11%-மாக உள்ளது. இந்த அளவு தொடர்ந்து கீழ் நோக்கி செல்கிறது.

9.34 லட்சம் பேர் – இந்தியாவில் கொரோனா சிகிச்சையில் இருப்போர்

சிகிச்சை பெறுபவர்களில் 77% பேர் 10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ளனர். நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 74,442 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

9.34 லட்சம் பேர் – இந்தியாவில் கொரோனா சிகிச்சையில் இருப்போர்

புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் 78% பேர் 10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ளனர். மகாராஷ்டிராவில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

9.34 லட்சம் பேர் – இந்தியாவில் கொரோனா சிகிச்சையில் இருப்போர்

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 903 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 82% பேர் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.