9.10.11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: முதல்வர் அறிவிப்பு

 

9.10.11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: முதல்வர் அறிவிப்பு

9.10.11ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி ஆல் பாஸ் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

கடந்த ஆண்டும் மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டும் ஆல் பாஸ் அறிவிப்பு வந்திருக்கிறது.

12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 10ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

9.10.11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: முதல்வர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பினை வெளியிட்ட முதல்வ்ர், அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தியும் அறிவித்தார்.

கொரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பிற மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடம் நடத்தப்பட்டு வருகின்றன.

12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வுகள் குறித்து மாணவர்களும் அசிரியர்களும் கேள்வி எழுப்பி இருந்தனர். 10,11 மாணவர்களுக்கு நடப்பு ஆண்டில் பொதுத்தேர்வுகளை நடத்துவ குறித்துபள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தின் வந்தனர். அந்த ஆலோசனையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் இன்று முதல்வர், பொதுத்தேர்வின்றி 9.10.11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள் என்று அறிவித்தார்.