9 மணி நிலவரம்: இதுவரை 13.48 சதவிகித வாக்குகள் பதிவு; சத்யபிரதா சாஹூ தகவல்!

 

9 மணி நிலவரம்: இதுவரை  13.48 சதவிகித வாக்குகள் பதிவு; சத்யபிரதா சாஹூ தகவல்!

காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை 13.48% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ  தெரிவித்துள்ளார்.

சென்னை:  காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை 13.48% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ  தெரிவித்துள்ளார். 

vote

சரியாக இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. வாக்குப் பதிவு தொடங்கியது முதல்  மக்கள் ஆர்வத்துடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர். அதேபோல் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர் நடிகைகள் உள்ளிட்டோரும் வரிசையில் நின்று தங்கள் வாக்கினைப் பதிவு செய்தனர். 

vote

இருப்பினும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்குப் பதிவு எந்திரங்கள் பழுதானதால் வாக்களிக்க முடியாமல் வாக்காளர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கின்றனர்.

voting

சென்னையில் அண்ணாநகர் மேற்கு, விருகம் பாக்கம், நுங்கம்பாக்கம், நெல்லை கோடீஸ்வரன் நகர், பூந்தமல்லி, செய்யாறு, ஒட்டன் சத்திரம், நாமக்கல், கோவை சிந்தாநல்லூர் பகுதி வாக்குச்சாவடி உட்படத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்படவில்லை. இதனால் வாக்காளர்கள் நீண்ட  நேரம் காத்திருந்தனர். இருப்பினும் இந்த தொடர் தாமதத்தால், பெரும்பாலான வாக்காளர்கள்  தங்கள் வீடுகளுக்குச் சென்றனர். இதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் இயந்திரம் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

காலை 9 மணி வரையில் பதிவான வாக்கு சதவிகிதம்:
  • திருவண்ணாமலை – 7.58%
  • ஆரணி – 8.75%
  • தேனி- 7.94%
  • வடசென்னை- 4.58%
  • தென்சென்னை- 5.67%
  • மத்திய சென்னை- 3.71%
  • பெரம்பூர்- 4.41%

ec

இந்நிலையில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ 9 மணி நிலவரப்படி எவ்வளவு சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். அதில்,  தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 10.01 சதவிகிதமும், கோவை மாவட்டத்தில் 11.20 சதவிகித வாக்குகளும்  பதிவாகி உள்ளன. 

அதே போல் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் 1.23 சதவிகிதம் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. வடசென்னையைப் பொறுத்தவரை 4.58 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. தென்சென்னையைப் பொறுத்தவரை 5.67 சதவிகித வாக்குகளும், மத்திய சென்னையில் 3.71 சதவிகித வாக்குகளும்  பதிவாகியுள்ளன. பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 4.41 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 

இதுவரை  திருப்பூர் தொகுதி வெங்கடபுரம் வாக்குச்சாவடியில் ஒரு வாக்கு கூட இதுவரையில் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: தள்ளாத வயதிலும் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த அன்பழகன்