“9 மணிக்கு 9 நிமிடங்கள்” மக்கள் நலன் காக்க பிரதமர் கூறியதை கேட்போம் – விஜயகாந்த்

 

“9 மணிக்கு 9 நிமிடங்கள்” மக்கள் நலன் காக்க பிரதமர் கூறியதை கேட்போம் – விஜயகாந்த்

பிரதமர் மோடி “நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு சவாலுக்கு  எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி.அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள். ஊரடங்கு மதித்து நடக்கும் மக்களுக்கு நன்றி. இந்தியாவில் மக்கள் ஊரடங்கு உலக அளவில் முன்னுதாரணமாக மாறியுள்ளது. ஏப்ரல் 5-ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்கை அணையுங்கள். வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் டார்ச் அல்லது செல்போன், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

 

 

இந்நிலையில் விஜயகாந்த் அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “நம்தேச நன்மைக்காகவும், மக்களின் நலனை காக்க வேண்டியும் பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள் கூறியதற்கு இணங்க இன்று (05.04.2020) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் அவரவர் வீட்டு வாசலில் அனைவரும் விளக்கு, மெழுகுவர்த்தி, மொபைல் டார்ச் ஏந்தி கூட்டுப் பிரார்த்தனை செய்து, நம் நாட்டு மக்களின் நன்மைக்காகவும், எல்லா வளங்களுக்காகவும், நலன்களுக்காகவும் பிரார்த்தனை செய்திடவேண்டும்.
எப்பொழுதுமே கூட்டு பிரார்த்தனைக்கு ஒரு மிகப்பெரிய சக்தி உண்டு அந்த மகா சக்தியை, நாம் கூட்டு பிரார்த்தனையின் மூலம் உருவாக்குவோம். அனைவருடைய வேண்டுதலின்படி நம் நாட்டு மக்கள் நிச்சயமாக எல்லா வளங்களும், நலங்களும் பெற இந்த நல்ல செயலை நாம் அனைவரும் செயல்படுத்துவோம். “ஒன்றுபடுவோம், வென்றிடுவோம்”” என குறிப்பிட்டுள்ளார்.