9 நிமிடம் விளக்கேற்றுவதற்கு அறிவியல் காரணம் இல்லை! – மத்திய அரசு விளக்கம்

 

9 நிமிடம் விளக்கேற்றுவதற்கு அறிவியல் காரணம் இல்லை! – மத்திய அரசு விளக்கம்

ஏப்ரல் 3ம் தேதி வீடியோ ஒன்றை வெளியிட்ட பிரதமர் மோடி, நாடு முழுவதும் ஏப்ரல் 5ம் தேதி (நாளை) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு விளக்கு, மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும். வீட்டின் பால்கனி, மாடியில் நின்றபடி டார்ச், மொபைல் போன் டார்ச்சை ஒளிர்விக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஏப்ரல் 5ம் தேதி இரவு ஒன்பது நிமிடங்களுக்கு விளக்கேற்றுவதில் எந்த ஒரு அறிவியல் காரணமும் இல்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஏப்ரல் 3ம் தேதி வீடியோ ஒன்றை வெளியிட்ட பிரதமர் மோடி, நாடு முழுவதும் ஏப்ரல் 5ம் தேதி (நாளை) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு விளக்கு, மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும். வீட்டின் பால்கனி, மாடியில் நின்றபடி டார்ச், மொபைல் போன் டார்ச்சை ஒளிர்விக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதைத் தொடர்ந்து கொரோனா ஒழிப்புக்கும் விளக்கேற்றுவதற்கும் தொடர்பு உள்ளது என்ற வகையில் பல வதந்திகள் வட இந்தியாவில் பரவி வருகிறது. மிகப் பெரிய அளவில் விளக்கேற்ற, சாலையில் கொரோனா கொடும்பாவி கொளுத்துவதற்கான ஏற்பாடுகளை வட இந்தியாவில் மக்கள் செய்து வருகின்றனர்.

மேலும், டார்ச் ஒளியிலிருந்து வரும் புற ஊதாக் கதிர் கொரோனாவை அழிக்கும் என்று எல்லாம் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இவற்றை மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு துறையின் கீழ் உள்ள பத்திரிகை தகவல் மையம் மறுத்துள்ளது. இது தொடர்பாக பி.ஐ.பி வெளியிட்ட உண்மை கண்டறியும் ஆய்வில், “ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணிக்கு ஒளியேற்றுவது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். இவற்றில் அறிவியல் ரீதியான எந்த ஒரு உண்மையும் இல்லை” என்று கூறியுள்ளது.