8ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை : ஆன்லைன் விளையாட்டில் நேர்ந்த சோகம்!

 

8ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை : ஆன்லைன் விளையாட்டில் நேர்ந்த சோகம்!

பொன்னேரி அருகே ஆன்லைன் விளையாட்டில் ஏற்பட்ட மன உளைச்சலால் 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வசித்து வருபவர் பாபு. இவரது மகன் ராகேஷ் (13). இவர் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த நிலையில், பள்ளிகள் திறக்கப்படாததால் தனது பெரியம்மா வீட்டில் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வெகு நேரம் ஆகியும் ராகேஷ் தங்கி இருந்த அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவரது தாத்தா, ரூமுக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் ராகேஷ் சடலமாக கிடந்துள்ளார்.

8ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை : ஆன்லைன் விளையாட்டில் நேர்ந்த சோகம்!

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தாத்தா உடனாடியாக ராகேஷின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனிடையே, இச்சம்பவத்தை அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராகேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், ஆன்லைன் விளையாட்டில் ராகேஷ் ஈடுபட்டிருந்ததும் அதில் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளால் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் ஆன்லைன் விளையாட்டுகளை நிரந்தரமாக நீக்க வேண்டுமென ராகேஷின் தந்தை மன வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.