சித்ரா ஆடியோ… ஹேம்நாத்திடம் 8 மணி நேரம் விசாரணை

 

சித்ரா ஆடியோ… ஹேம்நாத்திடம் 8 மணி நேரம் விசாரணை

திருமணமாகி இரண்டு மாதத்தில் இறந்ததால் நடிகை சித்ராவின் மரணத்தில் நிலவும் சந்தேகத்தினால் கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்று வருகிறது.

கைதாகி சிறையில் இருக்கும் சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் கோட்டாட்சியர் 8 மணி நேரம் விசாரணை நடத்தியிருக்கிறார். நாளை சித்ராவின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களிடமும் விசாரணை நடத்துகிறார் கோட்டாட்சியர்.

சித்ரா ஆடியோ… ஹேம்நாத்திடம் 8 மணி நேரம் விசாரணை

சித்ரா மன அழுத்தத்தில் இருந்திக்கிறார். மிரட்டல்களுக்கு ஆளாக்கப் பட்டிருக்கிறார் என்று ஹேம்நாத்தின் தந்தை கோட்டாட்சியர் விசாரணையில் தெரிவித்திருக்கிறார். ஆனால், அவரது மகனின் தொல்லைகள் தாங்க முடியாமல் அவரிடம் சித்ரா போனில் அழுத ஆடியோ போலீசார் கையில் சிக்கி இருக்கிறது. சித்ராவின் செல்போனில் இருந்த அந்த ஆடியோ பதிவை ஹேம்நாத் அழித்துள்ளார். ஆனால், ரெகவரி தொழில்நுட்பம் மூலமாக சைபர் கிரைம் போலீசார் அந்த ஆடியோவை மீட்டெடுத்துவிட்டனர்.

சித்ரா ஆடியோ… ஹேம்நாத்திடம் 8 மணி நேரம் விசாரணை

உடன் நடிப்பவர்களுடன் சந்தேகப்பட்டு ஹேம்நாத் கொடுத்து வரும் டார்ச்சரை மாமனாரிடம் சொல்லி அழும் அந்த ஆடியோ ஆதாரத்தை வைத்துதான் ஹேம்நாத்தை கைது செய்து பொன்னேரி சிறையில் அடைத்தது போலீஸ்.

இன்று நடந்த எட்டு மணி நேர விசாரணையில் அந்த ஆடியோ குறித்தும் விசாரணை நடத்தி இருக்கிறார் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ.

சித்ராவுடன் நடித்து வந்த குமரனும், விஜய் டிவி தொகுப்பாளர் ரக்‌ஷனும் சித்ராவுக்கு தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களும் நாளை விசாரிக்கப்படலாம் என்றே தெரிகிறது.