கொரோனாவுக்கு மட்டும் முக்கியத்துவம்… மேகாலயாவில் சிகிச்சை இன்றி பலியான 877 பச்சிளம் குழந்தைகள்!

கொரோனாவுக்கு மட்டும் முக்கியத்துவம்… மேகாலயாவில் சிகிச்சை இன்றி பலியான 877 பச்சிளம் குழந்தைகள்!

மேகாலயாவில் கொரோனாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து மற்ற நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்காத காரணத்தால் 877 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா நோய்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அப்படி இருந்தும் தினமும் 75 ஆயிரம் பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு உண்மையில் முக்கியத்துவம் அளித்து சிகிச்சை, நோய்த் தடுத்தல் பணிகளை

கொரோனாவுக்கு மட்டும் முக்கியத்துவம்… மேகாலயாவில் சிகிச்சை இன்றி பலியான 877 பச்சிளம் குழந்தைகள்!

மேற்கொள்ளவில்லை என்றால் விரைவில் அது ஒரு லட்சமாக உயரலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இப்படி மேகாலயா அரசு கொரோனாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து இதர நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் விட்டதால் ஏராளமான உயிரிப்புகள் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. அங்கு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூலை வரையிலான மூன்று மாதத்தில் மட்டும் சரியான மருத்துவ சிகிச்சை இல்லாத காரணத்தால் 61 கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு மட்டும் முக்கியத்துவம்… மேகாலயாவில் சிகிச்சை இன்றி பலியான 877 பச்சிளம் குழந்தைகள்!

மேலும், 877 பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை இன்றி உயிரிழந்துள்ளனர். மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் கொரோனாத் தடுப்பு பணியில் ஈடுபட்டதால் இந்த அளவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுவிட்டது என்று மேகாலயா சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவுக்கு மட்டும் முக்கியத்துவம்… மேகாலயாவில் சிகிச்சை இன்றி பலியான 877 பச்சிளம் குழந்தைகள்!

இப்படி ஒவ்வொரு மாநிலத்தில் எத்தனை குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உயிரிழந்தார்கள் என்று தெரியவில்லை. அப்படி ஒரு கணக்கெடுப்பு நடத்தினால் கொரோனாவால் உயிரிழந்தவர்களை விட அவர்கள் உயிரிழப்பு அதிகம் இருக்கும்.

கொரோனாவுக்கு மட்டும் முக்கியத்துவம்… மேகாலயாவில் சிகிச்சை இன்றி பலியான 877 பச்சிளம் குழந்தைகள்!

ஊரடங்கு காரணமாக வாழ வழியின்றி, மருத்துவ சிகிச்சை பெற வசதியின்றி, இலவச மருத்துவ சிகிச்சையும் கிடைக்காமல் உயிரிழந்த நோயாளிகள் எண்ணிக்கையையும் சேர்த்தால் இந்த நம்பர் இன்னும் பெரிய அளவில் செல்லும் என்று கவலை தெரிவிக்கின்றனர் மருத்துவப் பணியாளர்கள்.