’’எனக்கு வயது 84. ஆயினும்..’’-கமல் உருக்கம்

 

’’எனக்கு வயது 84. ஆயினும்..’’-கமல் உருக்கம்

’’எனக்கு வயது 84. ஆயினும், தொழிலாளி வர்க்கத்திற்கு என் கடமையைச் செய்ய நான் இங்கே வந்துள்ளேன். உங்கள் மத்தியில் நான் இறந்தாலும் அதைவிட எனக்கு கிடைக்கக்கூடிய பாக்கியம் வேறென்ன? ’’ என்று முழங்கிய சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலரை நினைவு கூர்கிறேன். இத்தகு முன்னோடிகளிடம் இருந்துதான் நான் உத்வேகம்கொள்கிறேன் என்று தெரித்திருக்கிறார் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன்.

’’எனக்கு வயது 84. ஆயினும்..’’-கமல் உருக்கம்

தமிழகத்தின் தலைசிறந்த சமூக சீர்திருத்தவாதியும், விடுதலை போராட்ட வீரருமானவர் ம.சிங்காரவேலர். அவரது பிறந்த தினம் இன்று. (18.2.1860)

சென்னையில் பிற்படுத்தப்பட்ட மீனவர் குடும்பத்தில் பிறந்த சிங்காரவேலர், மாநிலக்கலூரியில் பட்டம் பெற்று, சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் படித்து வழக்கறிஞர் ஆனார். மீனவர் குடும்பத்தில் பிறந்ததால் நீதிமன்றத்தில் அவமானப்படுத்தப்பட்டபோது, அந்த வழக்கில் வென்று காட்டிவிட்டு, வழக்கறிஞரின் கருப்பு உடையை கழற்றி எரிந்தவர் சிங்காரவேலர்.

சிறந்த தேசபக்தரான இவர் தனது 86வயதில் 1946ல் மறைந்தார்.

சிங்காரவேலரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கமல்ஹாசன் தனது எண்ணத்தினை பகிர்ந்திருக்கிறார்.