கிறிஸ்துமஸ் நாளில் ரம்யாவுக்கு கிடைக்காத பரிசு- பிக்பாஸ் 82-ம் நாள்

 

கிறிஸ்துமஸ் நாளில் ரம்யாவுக்கு கிடைக்காத பரிசு- பிக்பாஸ் 82-ம் நாள்

பொதுவாக இந்திய தொலைக்காட்சிகளில் இந்து மத பண்டிகை கொண்டாட்டங்கள் காட்டப்படுவதுபோல அல்லது அதற்கான சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்புவதைப் போல மற்ற மத பண்டிகைகளுக்குச் செய்வதில்லை என்பது வெளிப்படையான ஒன்றுதான். அதற்கு மாறாக, நேற்றைய பிக்பாஸ் எப்பிசோட்டில் கிறிஸ்துமஸ் விழா மிகச் சிறப்பாக வண்ணமயமாகக் கொண்டாடப்பட்ட காட்சிகள் ஒளிப்பரப்பாகின.

முதன் காட்சியிலிருந்து தொடங்கியது

’கிறிஸ்துமஸ் கிஃப்ட் ரெடி பண்ணிக்கொடுங்க’ என்று பிக்கி கொடுத்த டாஸ்க் உண்மையில் அழகானது. தங்களிடம் இருந்த பொருள்களை வைத்து, ஒரு கிஃப்ட் தயார் செய்து வீட்டுக்குள் இருக்கும் மற்றவர்களுக்குக் கொடுத்தார்கள்.

கிறிஸ்துமஸ் நாளில் ரம்யாவுக்கு கிடைக்காத பரிசு- பிக்பாஸ் 82-ம் நாள்

கேபி – ரியோவுக்கும், ரியோ – ஆஜித்க்கும், ஆஜித் – அனிதாவுக்கும், அனிதா – ஆரிக்கும், ஆரி – பாலாவுக்கும், பாலா -சோம்க்கும், சோம் – கேபிக்கும், ஷிவானி – பாலாவுக்குமாக பரிசுகளைக் கொடுக்கச் சொல்லி பிக்கியிடம் கொடுத்தனர்.

ரம்யா தந்து பரிசை அனிதாவுக்குக் கொடுக்கச் சொல்லி ஒரு வேண்டுகோளை வைத்தார். ’ஒருவேளை அனிதாவுக்கு ஏற்கெனவே பரிசு வந்து, ஷிவானிக்கு பரிசே வர வில்லையெனில் என் பரிசை ஷிவானிக்குக் கொடுத்திருங்க’ என்றார். நிஜமாகவே இது ஆச்சர்யம்தான். பாலா நிச்சயம் ஷிவானிக்குப் பரிசு தருவார் எனப் பலரும் யூகித்தனர். ஆனால், அப்படி பாலா கொடுக்காமல் போக வாய்ப்பிருக்கிறது என்று சரியாக யூகித்தவர் ரம்யாதான். குழந்தை டாக்டர் மட்டுமல்ல… மனநல மருத்துவரும்கூட போல.

கிறிஸ்துமஸ் நாளில் ரம்யாவுக்கு கிடைக்காத பரிசு- பிக்பாஸ் 82-ம் நாள்

ரம்யா யூகித்ததுபோல ஷிவானிக்குப் பரிசு கொடுக்க யாரும் முன் வராததால் ரம்யாவின் பரிசை ஷிவானிக்குக் கொடுத்திருந்தார் பிக்கி. அதேபோல, ரம்யாவுக்கு யாரும் பரிசு கொடுக்க முன் வராதது ஆச்சர்யமாக இருந்தது. அவருக்கு ஒரு பரிசை பிக்கியே அனுப்பியிருந்தார்.

ரம்யாவுக்கு பரிசு அனுப்பப்படாதது வீட்டில் இருவருக்கு மட்டுமே உறுத்தலாக இருந்தது. ஒன்று, ரம்யாவின் செல்ல தம்பி ஆஜித். அவர் தன்னிடம் இருந்த ட்ரெஸ் ஒன்றை மடித்து ‘இது ரம்யாவுக்கு’ என்று வைத்தார். இன்னொருவர் ஷிவானி. அவருக்கு வந்த பரிசு ரம்யாவுடையது என்று தெரிந்ததும், ரம்யாவுக்கு பரிசே வர வில்லை என்ற குற்றவுணர்வில் ஒரு பெட்டியில் சிலவற்றைப் போட்டு, இந்தப் பரிசை ஏற்றுக்கொள்வீர்களா என்று கேட்டப்படியே கொடுத்தார். வழக்கமான சிரிப்போடு பெற்றுக்கொண்டார் ரம்யா.

கிறிஸ்துமஸ் நாளில் ரம்யாவுக்கு கிடைக்காத பரிசு- பிக்பாஸ் 82-ம் நாள்

இதுவே அனிதாவுக்கு எந்தப் பரிசும் கிடைக்காமல் இருந்திருந்தால் எப்பிசோட் முழுக்கவே கண்ணீர் மழையாக இருந்திருக்கும்.

தன் உடையை நறுக்கி சின்னதாக்கி, ரியோவின் குழந்தைக்கு பரிசாகக் கொடுத்திருந்தார் கேபி. அதைப் பார்த்ததும் நெகிழ்ந்து கட்டிக்கொண்டார் ரியோ. அப்படியில்லையெனினும் கட்டிக்கொள்ளவே செய்வார். இன்னொரு பக்கம், தனக்கு பரிசு அனுப்பியது ஆஜித்தான் எனத் தெரிந்துகொண்டு நீண்ட விக்கல் சிரிப்பை உதிர்த்தார் அனிதா.

கிறிஸ்மஸ் தொப்பிக்குள் துணி துவைக்கும் பிரஷை வைத்து வந்த பரிசைப் பார்த்து ஆரி ஜெர்க் ஆனார். ஆனால், ஏதாச்சும் பரிசு கிடைத்ததே என்று ஆறுதல் பட்டுக்கொண்டார்.

இடையில் கேப்டனுக்கான டாஸ்க் நடத்தப்பட்டு ஆரி மீண்டும் கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கிறிஸ்துமஸ் நாளில் ரம்யாவுக்கு கிடைக்காத பரிசு- பிக்பாஸ் 82-ம் நாள்

அதன்பின் எல்லாமே கிறிஸ்மஸ் கொண்டாட்டம்தான். கேபி மற்றும் ரியோவின் தலைமையில் கேக் தயாரிக்கச் சொன்னார் பிக்கி. அதற்கு அவர் ரெசிபி சொன்ன விதம் அழகோ அழகு. ஹோட்டலில் சர்வர் மெனு கார்டை ஒப்பிப்பதுபோல ஒப்பித்தார். அதை ஏதோ கேட்டு, ஏதோ கேக் செய்தார்கள். பெயரளவில் ஒருவருக்கொருவர் பாராட்டிக்கொண்டு, கேபியின் கேக் சிறப்பு என ரிசல்ட் சொன்னார் ரியோ.

பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பவற்றைப் பற்றி க்விஸ் புரோகிராம் நடத்தினார் பிக்கி. அதில் சரியாகப் பதில் சொல்லும்வரை கேள்வியை மாற்றிக்கொண்டே இருந்தார். அதில் வென்றவர்கள் ஏராளமான பரிசு பெட்டிகளைச் சுமந்து வந்தனர்.

கிறிஸ்துமஸ் நாளில் ரம்யாவுக்கு கிடைக்காத பரிசு- பிக்பாஸ் 82-ம் நாள்

அந்தப் பரிசு பெட்டிகளில் ஹவுஸ்மேட்ஸ் உறவினர்கள் தந்த பரிசுகளாக அவை இருந்தன. அதில் ரியோவின் குழந்தை படம் இருக்க, வழக்கம்போல ரியோ கேபி, சோம் ஒன்றுகூடி நெகிழ்ந்தனர்.

இரவில் கிறிஸ்துமஸ் விருந்து அளித்தார் பிக்கி. பாடல்கள், கிறிஸ்துமஸ் குடில், பிரியாணி விருந்து எனக் கொண்டாட்ட மனநிலையை உருவாக்கி தந்தார். இதெல்லாம் பார்த்தால் பாலாவுக்கு பாவ மன்னிப்பு கேட்கும் மனநிலை வந்துடும் போல. அதையே மாற்றி, எல்லோரிடமிருந்து என்னென்ன கற்றுக்கொண்டேன் என்று விரிவாக விளக்கினார். இதுதான் சாக்கு என்று அனிதாவும் தான் கொடுத்த பரிசுப் பெட்டியில் ஏன் அதை வைத்தேன் என்று விளக்கம் கொடுக்க, பிக்கியே கொட்டாவி விட்டார். அப்படியே லைட்ஸ் ஆஃப் செய்தார்.