அமைதியாக நிறைவடைந்த அசாம் சட்டப்பேரவை தேர்தல்.. இறுதி கட்ட தேர்தலில் 82 சதவீதத்துக்கு மேல் வாக்குப்பதிவு

அமைதியாக நிறைவடைந்த அசாம் சட்டப்பேரவை தேர்தல்.. இறுதி கட்ட தேர்தலில் 82 சதவீதத்துக்கு மேல் வாக்குப்பதிவு

அசாமில் நேற்று நடந்த இறுதி கட்ட சட்டப்பேரவை தேர்தலில் 82.29 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்.

அசாமில் 126 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மொத்தம் 3 கட்டங்களாக நடைபெற்றது. கடந்த மார்ச் 27ம் தேதி முதல் கட்டமாக 47 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. கடந்த 1ம் தேதியன்று 2ம் கட்டமாக 39 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இறுதி மற்றும் 3ம் கட்டமாக நேற்று 40 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

அமைதியாக நிறைவடைந்த அசாம் சட்டப்பேரவை தேர்தல்.. இறுதி கட்ட தேர்தலில் 82 சதவீதத்துக்கு மேல் வாக்குப்பதிவு
அசாம் 3வது மற்றும் இறுதி கட்ட தேர்தல்

அசாமில் நேற்று நடந்த இறுதி மற்றும் 3ம் கட்டமாக தேர்தல் நடந்த 40 தொகுதிகளில் ஒட்டு மொத்த அளவில் 82.29 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகி இருந்தது. வாக்காளர்கள் ஆர்வமாக வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அமைதியாக தேர்தல் நடந்து முடிந்தது. இந்த 40 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 337 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 12 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள். 325 வேட்பாளர்கள் ஆண்கள்.

அமைதியாக நிறைவடைந்த அசாம் சட்டப்பேரவை தேர்தல்.. இறுதி கட்ட தேர்தலில் 82 சதவீதத்துக்கு மேல் வாக்குப்பதிவு
தேர்தல்

அசாமில் முதல் கட்ட தேர்தலில் சுமார் 77 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. கடந்த 1ம் தேதி நடைபெற்ற 2ம் கட்ட தேர்தலில் 74.76 சதவீதம் வாக்குப்பதிவு நடந்தது. 3வது மற்றும் இறுதி கட்ட தேர்தலில் 82.29 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அசாம் சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.